காங்., தேர்தல் அறிக்கை பாதுகாப்புக்கு ஆபத்தா? பழிவாங்கும் செயல் தடுக்கப்படும்

'காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள், செயல்படுத்த முடியாதவை; ஜம்மு - காஷ்மீர் குறித்த வாக்குறுதிகளை பார்க்கும் போது, ராகுலின் நண்பர்கள், அபத்தமான யோசனை கூறியிருப்பது தெளிவாக புரிகிறது. காங்., தேர்தல் அறிக்கை, நாட்டை பிரிவினைக்கு எடுத்து செல்லும் ஆபத்து உள்ளது' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். அவரது விமர்சனத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துக்கள்:

பழிவாங்கும் செயல் தடுக்கப்படும்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனம் மற்றும் தனிப்பட்ட பணக்கார மனிதருக்காக தயாரிக்கப்பட்டது அல்ல. நாட்டில் உள்ள, ஒட்டு மொத்த சாமானிய மக்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.


ஜம்மு - காஷ்மீர் தொடர்பாக, குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில், எந்த பிரிவினைவாதமும் இல்லை. நாட்டை துண்டாடுவதற்குரிய அறிவிப்புகளும்,எதுவும் கிடையாது.தேசவிரோத சட்டத்தை நீக்குவதற்கான அறிவிப்பை, குறை கூறுகின்றனர்.


கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமையை பறிப்பதை தடுக்கவும், நாட்டின் மீது பற்றுள்ளோரும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாக இருப்போரும், அரசியல் காரணங்களுக்காக, பழிவாங்கப்படுவதை தடுக்கவே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மாநில உரிமைகளை பறிக்கக்கூடாது என்பதற்காக, 'நீட்' தேர்வுக்கு விலக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். மதிய உணவுடன், பால் வழங்கும் அறிவிப்பையும் தந்துள்ளோம். இதனால், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். தகவல் உரிமை சட்டம், கல்வி உரிமை சட்டத்தை போல, சுகாதார உரிமை சட்டம் உருவாக்கப்பட உள்ளது.


இதனால், தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கக் கூடிய உயர்தரமான சிகிச்சை, அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும்.மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, மீனவர்களுக்கு தனி அமைச்சகம், மத்திய, மாநில அரசுகளில் காலியாக உள்ள, 34 லட்சம் பணியிடங்களை நிரப்புவது, கிராமப்புறங்களில், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது போன்ற, அறிவிப்புகளும் உள்ளன.


இது, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இவற்றை விமர்சிப்பது, அருண்ஜெட்லியின் தகுதிக்கு அழகல்ல.


மோகன் குமாரமங்கலம்,


செயல் தலைவர், தமிழக காங்கிரஸ்எல்லை பாதுகாப்பு சிக்கலாகும்நாட்டின் எல்லையை பாதுகாக்கும், மத்திய ஆயுத படை போலீசாரின் அதிகாரம் குறைக்கப்படுவது, ஏற்புடையதல்ல. பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடியவர்களுக்கு, மனச்சோர்வு அளிக்கும் வகையில், அவர்களும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என, கட்டுப்பாடு விதிப்பது, நாட்டின் எல்லை பகுதிக்கு ஆபத்தை உருவாக்கும்.


நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தலையிடக் கூடாது; அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும்; அவர்களை சுதந்திர மாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.'விவசாய கடன்களை, திரும்ப செலுத்தா விட்டால், அது, கிரிமினல் குற்றமாக கருதப்படாது' என்கிறார் ராகுல். தற்போது, கடனை திருப்பி தரவில்லை என்றால், வீடு அல்லது டிராக்டர்களை தான் ஜப்தி செய்கின்றனர். கடன் கட்டாதவர்கள் மீது, குற்ற நடவடிக்கை எடுப்பதில்லை.


ஒவ்வொரு திட்டத்திற்கும், கமிஷன் அமைப்போம் என்றும், அரசியல் சாசன அந்தஸ்து
வழங்கப்படும் என்றும்,தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, அரசுக்கு வீண் செலவை ஏற்படுத்தும். பெரும்பான்மை இல்லாமல், அத்திட்டத்தை செயல்படுத்த முடியாது.


ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என, அறிவித்துள்ளனர். அப்படி அந்தஸ்து வழங்கும் போது முதல் மூன்று ஆண்டுகளுக்கு, ஆந்திராவில், எந்த தொழிற்சாலை துவக்கினாலும் வரி கிடையாது; தொழில் துவங்கினால், நிலம் இலவசம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கலாம். இதனால், தமிழகத்தில் தொழில் துவங்க, யாரும் முன் வர மாட்டார்கள். எனவே, தமிழகத்தின் தொழில் வளம் பாதிக்கும்.


'நீட்' தேர்வு ரத்து என, அறிவிக்கவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு என, கூறியுள்ளனர். இது, ஒரு ஏமாற்று வேலை. மாநில அளவில், நீட் தேர்வுக்கு இணையான தேர்வை, இந்திய மருத்துவ கழகம் நடத்தும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் வாக்குறுதிகள் எல்லாம் ஏமாற்று வேலை.


வழக்கறிஞர் ஆதி குமரகுரு,

தேசியக்குழு உறுப்பினர்,

செய்தி தொடர்பாளர், தமிழக பா.ஜ.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)