காங்கிரசில் இணைந்தார் நடிகர் சத்ருகன் சின்ஹா

புதுடில்லி:'பாலிவுட்' நடிகரும், பா.ஜ., - எம்.பி.,யுமான சத்ருகன் சின்ஹா, அந்த கட்சியிலிருந்து விலகி, காங்கிரசில் நேற்று இணைந்தார்.


ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், சத்ருகன் சின்ஹா, 72; இவர், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பின், பா.ஜ.,வில் இணைந்தார்.பா.ஜ., மூத்த தலைவரான, மறைந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய அமைச்சராக பதவி வகித்தார். இந் நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில், பீஹாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தனக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படாததை அடுத்து, கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்தார்.


பிரதமர் நரேந்திர மோடி குறித்து, அவ்வப்போது கடுமையான கருத்துகளை தெரிவித்து வந்தார். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட அவருக்கு, பா.ஜ., மேலிடம், 'சீட்' வழங்கவில்லை. இதையடுத்து, காங்., தலைவர் ராகுலை, சமீபத்தில் சந்தித்து பேசினார்.இந்நிலையில், சத்ருகன் சின்ஹா, பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்.,கில் இணைவதாக, நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.


இது குறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பா.ஜ., இரு நபர் ராணுவத்தை போல செயல்படுகிறது. அந்த கட்சியில், முக்கிய முடிவு களை, தலைவர்கள் கூட்டாக சேர்ந்து எடுப்பது இல்லை. மோடி, அமித் ஷா கட்டுப்பாட்டில் தான் கட்சி இயங்குகிறது.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மஹாஜன் போன்ற மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதையை, பா.ஜ., வழங்கவில்லை.கட்சிக்குள் ஜனநாயகம் மறைந்து, சர்வாதிகாரம் தலை துாக்கியுள்ளது; இதைப் பற்றி வெளிப்படையாக பேசியதால், என்னை துரோகி என்றனர்.


இதை பொறுக்க முடியாமல் தான், அந்த கட்சியிலிருந்து வெளியேறி, காங்.,கில் இணையும் முடிவை எடுத்தேன். நாளைய இந்தியாவின் நம்பிக்கை முகமாக ராகுல் இருக்கிறார். அவரது தலைமையின் கீழ் பணியாற்றுவதில் மகிழ்ச்சி.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிலையில், பீஹாரின் பாட்னா சாஹிப் தொகுதியின், காங்., வேட்பாளராக, சத்ருகன் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் களம் இறங்குகிறார்.


உளறல்சத்ருகன் சின்ஹா, நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பீஹார் மாநில, காங்., தலைவர், சக்திசிங் கோஹிலை, ''பா.ஜ.,வின் பலம் வாய்ந்த தலைவர்,'' எனக் கூறியதால், சலசலப்பு ஏற்பட்டது. பின், சுதாரித்த, சத்ருகன் சின்ஹா, ''காங்கிரசின் பலம் வாய்ந்த தலைவர்,'' என, தவறை திருத்தினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)