இங்க அடிச்சா... அங்க வலிக்கும்!

ஒரே கூட்டணியில் இருந்தாலும், கர்நாடகாவில், ஆளும், காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் இடையே, ஒட்டுதல் இல்லை.


மாண்டியாவில் நடக்கும் உள்குத்து, மைசூரிலும் எதிரொலிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள, 28 தொகுதிகளுக்கு, வரும், 18, 23ல் தேர்தல் நடக்க உள்ளது. கர்நாடகாவில் தற்போது, முதல்வர், குமாரசாமி தலைமையிலான, மத சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது.


லோக்சபா தேர்தலில், இந்தக் கூட்டணி தொடர்கிறது. மாண்டியா தொகுதியில், குமாரசாமியின் மகன், நிகில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, காங்., முன்னாள், எம்.பி.,யான, மறைந்த நடிகர், அம்பரீஷின் மனைவி, நடிகை, சுமலதா, சுயேச்சையாக போட்டியிடுகிறார்.பா.ஜ., அவருக்கு ஆதரவு தெரிவித்து வேட்பாளரை நிறுத்தவில்லை. கன்னட திரையுலகின ரும், சுமலதாவுக்காக பிரசாரம் செய்து வருகின்றனர்.இதனால்,சுமலதாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்நிலையில், மாண்டியாவைச் சேர்ந்த, காங்கிரஸ் நிர்வாகிகள், நிகிலுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்ய மறுத்துவருகின்றனர்.இந்தத் தொகுதியில், ம.ஜ.த., மற்றும் காங்., இடையே எப்போதுமே போட்டி உள்ளது. அது,இந்தத் தேர்தலில் எதிரொலிக்கிறது. இந்நிலையில், மாண்டியா தொகுதி, காங்கிரஸ் நிர்வாகிகளை வரவழைத்து பேசியுள்ளார், முன்னாள் முதல்வரான, காங்., மூத்த தலைவர், சித்தராமையா.


மைசூரூ தொகுதியில், தன் ஆதரவாளரான, விஜய சங்கரை நிறுத்தியுள்ளார், சித்தராமையா. அவரின் சொந்த மாநிலமான அங்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., தோல்வி அடைந்தது.அதனால், மைசூரு தொகுதியில் வென்று, தன் வலிமையை காட்ட அவர் திட்டமிடுள்ளார்.'மாண்டியாவில், காங்கிரஸ் பிரசாரம் செய்யாவிட்டால், மைசூரில், நம் வேட்பாளருக்கு, ம.ஜ.த., ஆதரவு தெரிவிக்காது. 'அதனால், பகைமையை மறந்து பிரசாரம் செய்யுங்கள்' என, நிர்வாகிகளிடம், சித்தராமையா கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)