ஐடி ரெய்டு: சந்திரபாபு தர்ணா

விஜயவாடா: தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக கூறி விஜயவாடாவில், அக்கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


இது குறித்து அவர் கூறுகையில், பிரதமர் மோடி உத்தரவின் பேரில், தெலுங்கு தேசம் கட்சியினரை குறிவைத்து ரெய்டு நடத்துகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், அனைத்து நடவடிக்கைகளும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி நடக்க வேண்டும். அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். ஒரு கட்சி, மற்ற கட்சியை அடக்கக்கூடாது எனக் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)