பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி

அம்ரோஹா: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆனால், இங்குள்ள எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உ.பி., மாநிலம் அம்ரோஹாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எனக்கு ஜாயித் விருது வழங்கிய ஐக்கிய அரபு எமீரேட்சுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த விருது மோடிக்கு வழங்கவில்லை. இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது. இந்த மக்கள் சேவகருக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்துள்ளீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சி பின்னணியில் மக்கள் உள்ளனர். மோடி இல்லை. எதிர்க்கட்சிகள் என்னை கடுமையாக விமர்சித்துள்ளன.


பயங்கரவாதிகளுக்கு புரியும் மொழியில் அவர்களுக்கு பதிலடி அளிக்கப்பட்டது. எதிரிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதும், இங்கிருக்கும் சிலர் அழ துவங்கினர். உலகளவில் பாகிஸ்தான் அம்பலப்படுத்தப்பட்ட போது, இங்கிருக்கும் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகின்றனர். பயங்கரவாதிகளை வேட்டையாடியது குறித்து கேள்வி கேட்கின்றனர். அக்கட்சிகள் பாகிஸ்தான் குரலில் பேசுகின்றன. பயங்கரவாத விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மென்மை போக்கை கடைபிடிக்கின்றன. தேசிய பாதுகாப்பிறகு எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. நாட்டை பிரிக்க முயற்சி செய்கின்றன. அம்பேத்கரை தோற்கடிக்க காங்கிரஸ் அனைத்து வேலைகளையும் செய்தது. இதற்காக சதி செய்தது. இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)