மத்தியில் கூட்டணி ஆட்சி: சந்திரசேகர ராவ்

ஐதராபாத்: தேர்தலுக்கு பின் மத்தியில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.


இது தொடர்பாக ஆங்கில டிவி சானலுக்கு அவர் அளித்த பேட்டி: பிரதமராவது எனது நோக்கம் இல்லை. அதற்கான திட்டமும் என்னிடம் இல்லை. லோக்சபா தேர்தல் முடிவுகள் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருக்கும். தேர்தலுக்கு பின், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் அடுத்து அமையும் ஆட்சியை முடிவு செய்யும் சூழ்நிலை உருவாகும். மத்தியில் அடுத்து கூட்டணி ஆட்சி தான் அமையும். 2014 தனித்து ஆட்சி அமைத்தது போல், மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்க முடியாது. கடந்த தேர்தலில், அக்கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் அக்கட்சி தோல்வியை சந்திக்க நேரிடும். 2014 ல் இருந்த சூழ்நிலை வேறு.



தற்போது உள்ள சூழ்நிலை வேறு. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பா.ஜ.,வும், காங்கிரசும் தவறிவிட்டன. நாட்டில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என கருதுகிறேன். இதனால், தேசிய அளவில், ஒத்த எண்ணங்கள் கொண்ட கட்சிகளுடன் இணைந்து புதிய அணி அமைக்க வேண்டும் என சொல்கிறேன். இது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வை கொடுக்கும். இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)