காங்., இல்லையென்றால் 25 தொகுதிகளில் கூட தி.மு.க., வெல்லாது
சென்னை: ''காங்கிரஸ் இல்லையென்றால், தி.மு.க.,வால் 25 தொகுதிகளை கூட வெல்ல முடியாது,'' என, த.வெ.க., இணை பொதுச்செயலர் நிர்மல்குமார் விமர்சித்தார். அவர் அளித்த பேட்டி: தி.மு.க.,வில் அடிப்படை மரியாதையை தான், காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஒப்பந்தமோ, கமிஷனோ கேட்கவில்லை. கூட்டணி பிரச்னைக்கு தி.மு.க., தான் காரணம். காங்கிரஸ் இல்லையென்றால், தி.மு.க.,வால் 25 தொகுதிகளை கூட வெல்ல முடியாது. காங்., உடன் கூட்டணி பேச்சு குறித்து, விஜய் அறிவிப்பார். தி.மு.க., மீது எல்லா தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளனர். 5,000 ரூபாய் கொடுத்தபோதும், முதல்வருக்கு பயம் போகவில்லை. த.வெ.க., மீதான பயத்தால், தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.,வையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் தி.மு.க., சேர்க்கிறது. தி.மு.க.,வை தவிர எல்லாரும், எங்களுடன் கூட்டணி வைக்க ஆசைப்படுகின்றனர். தற்போது, எந்த கூட்டணியும் உறுதியாக இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுகூட, கூட்டணிகள் மாற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 14 )
என்னுடைய கருத்தும் அதுவே , திமுக காங்கிரஸ் என்ற கழுதையின் மீதேறி பயணம் செய்த ஒரு பயணி , ஆனால் காங்கிரஸ் என்னும் கட்சியோ அகில இந்திய அளவில் இருக்கும் கட்சி என்பதனை மறந்து அடிமையாய் தமிழகத்தில் கிடக்கிறது , இந்திய அளவில் ஒரு நல்ல தலைமை வந்து விட்டால் பிஜேபி க்கு டப் கொடுக்கும் நிலைக்கு உயரும் அப்போது திமுக அது சுத்தம் செய்த கால்வாயில் தான் பயணம் செய்ய வேண்டியிருக்கும்
காங்கிரஸ் துணைஇல்லாமல் ஆட்சியை பெற்று காட்டுவோம். உதயநிதி முதல்வர். பன்னீர் செல்வம் இணை முதல்வர். பொன்முடி செந்தில் நேரு எல்லோருக்கும் அமைச்சர் வாய்ப்பு உண்டு. நானும் அண்ணன் தொரையும் மெரீனாவில் வாக்கிங் போவோம் .அப்படியே தலைவரின் நினைவிடத்தில் தினசரி மாலை வைத்து வணங்குவோம். இப்படி தான் நினைசிக்குவாரோ.
முதல்ல உன்னோட கட்சி எவ்வளவு தொகுதியில ஜெயிக்கும்னு சொல்ல முடியுமா? வந்துட்டாங்க இன்னொரு கட்சி பத்தி பேசறதுக்கு....
பார்க்கலாம்
25 என்று அவர் சொன்னது 39க்கு. தவறுதலாக 234க்கு என்று நினைத்து விடாதீர்கள்.
இதில் இருந்து தெரிவது, த.வே.கவுக்கு, இந்தியாவில் எதனை தொகுதி இருக்கு என்று, தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு என்று த.வே.க தாlaivaruku தெரியுமா? இதே கேள்வி ஒருமுறை 1980 களில் நம்ம T. ராஜேந்திரர் ஒரு தலைவரைப்பார்த்து கேட்டது.
தமிழ்நாட்டின் பரப்பளவை தெரிஞ்சு என்ன செய்ய போறானுக. பொறம்போக்கு நிலங்களை வளைச்சு போடவா?
த.வே.க ஒரு 110 வருமா?
funny to look at these comments congress TVK will never join as it is just B team of DMK. TVK made to only dismantle AIADMK
நீதான் தைரியமான ஆளாச்சே தனியா தான் நில்லேன் நின்னுதான் பாரேன்
ஓஹோ அப்படியா? தமிழ்நாட்டில் உங்கள் கட்சி இருக்கா?
தமிழக சட்டசபை தேர்தல் வித்தியாசமாக இருக்கும்; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் சூசகம்
பிப் 28, 2026 03:12 am