/ நொறுக்கு தீனி / ராஜினாமா ஏன்?

ராஜினாமா ஏன்?

கை கட்சிக்காரர்களின் கரங்களிலும் எப்படியாவது விசிலை தவழ விட வேண்டும் என்று தவியாய் தவித்த தாகூரான அந்த காங்., பிரமுகர், சூரியனை விட்டு கை விலகவில்லை என்றதும் நொந்து போய்விட்டாராம். கட்சியின் டில்லி பிரதிநிதிகள் சிலரை சந்தித்த போது, இது குறித்து முறையிட்டு மனக்குமுறலை வெளிப்படுத்தினாராம். 'அரசியல்ல இதெல்லாம் சகஜம்' என்று எல்லோரும் சொல்லிவிட, மேலும் நொந்து போய், வேறு வழியின்றி தனக்கான தேர்தல் பணியை ராஜினாமா செய்தாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arul Narayanan
ஏப் 03, 2026 08:15

இந்த நபர் திமுகவை எதிர்த்து பேசியதெல்லாம் ராகுல் ஆலோசனை படிதான். இந்த ராஜினாமாவும் அப்படியே. எல்லாம் நாடகம். அடுத்த தேர்தலில் விருதுநகரில் திமுக ஆதரவோடு போட்டி இடப் போவதும் இவர் தான்.