/ செய்திகள் / யாருக்காக குறுக்குச்சால் ஓட்டுகிறார் சசிகலா?

யாருக்காக குறுக்குச்சால் ஓட்டுகிறார் சசிகலா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை அறிவித்துள்ள சசிகலா, தென்னந்தோப்பு சின்னத்தில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார்.அண்மையில் தான் புதிதாக கட்சி தொடங்கி இருப்பதாக கட்சி கொடியை சசிகலா அறிமுகம் செய்து இருந்தார். இந்நிலையில் இன்று அவர் சென்னை போயஸ் கார்டனில் நிருபர்களை சந்தித்து கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை அறிவித்தார்.கட்சியின் பெயர்- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம்கட்சியின் சின்னம்- தென்னந்தோப்புகட்சியின் பெயர், சின்னத்தை அறிவித்த சசிகலா, வரும் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடும் எனவும் அறிவித்துள்ளார்.

தனிமரம் தோப்பாகாது!

நிருபர்களிடம் சசிகலா கூறியதாவது: தொண்டர் ஆரம்பித்த கட்சியில் நான் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன். தமிழக மக்களை திமுக கசக்கிப் பிழிந்து கொண்டு இருக்கிறது.இதையெல்லாம் பார்த்த நான், இதற்கு ஒரு முடிவு கட்டும் எண்ணத்தில் புதிய கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தேன். தனிமரம் தோப்பாகாது. தனிமரமாக வரவில்லை தோப்பாக வந்துள்ளோம்.நாங்கள் மக்களோடு இருக்கிறோம் என்பதற்கு எங்களுக்கு கிடைத்துள்ள தென்னந்தோப்பு சின்னமே சான்று. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் எனது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். தனிமரம் தோப்பு ஆகாது, கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு சசிகலா கூறினார்.

அதிமுகவினர் சொல்வது என்ன?

தேவர் ஜெயந்தி விழாவில், தினகரன், செங்கோட்டையன், ஓபிஎஸ் உடன் இணைந்து பங்கேற்ற சசிகலா, வீராவேசமாக பேட்டி கொடுத்தார். ஆனால் அவரோடு இருந்த மற்ற மூவரும் வெவ்வேறு கட்சி, கூட்டணிகளில் இணைந்து விட்டனர். தனி மரமாக நின்ற சசிகலா, இப்போது தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி கட்சி பெயரையும் அறிவித்துள்ளார். அவரது இந்த செயல், எப்பாடுபட்டேனும் அதிமுக வெற்றியை தடுத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பதை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. இதற்குரிய விளைவுகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கின்றனர், அதிமுகவினர்.

தேர்தல் நேரத்தில்…!

ஊழல் வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்த சசிகலா, சில ஆண்டுகள் அமைதியாக இருந்தார். அவ்வப்போது, தன் ஆதரவாளர்களை திரட்டி சிறு சிறு கூட்டம் போடுவதும், பேட்டி கொடுப்பதுமாக இருந்தவர், தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சி தொடங்குவதாக அறிவித்து கொடி அறிமுகம் செய்தார். இன்று கட்சி பெயரையும் அறிவித்துள்ளார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 14, 2026 09:23

திமுகவின் இன்னொரு புதிய டீம் ..........


ரவி
மார் 13, 2026 22:49

ஸ்மால் மம்மி! அடுத்த தமிழக முதலமைச்சர் கண்டிப்பா நீங்கதான். இந்த நேரம் பாத்து ஓ.பி.எஸ் உங்க கூட இல்லையே இருந்திருந்தா ஓடியாடி இந்நேரம் உங்க பதவி ஏற்பு விழாவை ரெடி பண்ணிக்கிட்டு இருந்திருப்பாரு.ஒரே ஒரு சிக்கல் வித்யாசாகர் ராவ் மாதிரி இப்பவும் பொறுப்பு கவர்னர். அவரு மும்பையில உட்கார்ந்த மாதிரி இவரு திருவனந்த புரத்தில உட்கார்ந்துக்கப் போறாரு? அத மட்டும் கொஞ்சம் பார்த்துக்கிருங்க!


sankaranarayanan
மார் 13, 2026 21:09

தனி மரம் தோப்பு ஆகாது என்பதை சசிகலா முழுமையாக தெரிந்துகொண்டு அரசியலில் ஈடுபட வேண்டும் அதுவும் தென்னை மரத்தை சின்னமாக கொள்ளவேண்டும்


Sambath
மார் 13, 2026 17:53

மொக்க ஜோ...


tirou
மார் 13, 2026 17:13

ஒற்றை பனைமரம் சின்னம் பொருத்தமாக இருக்கும்


இந்து
மார் 13, 2026 16:53

யாரும் சேத்துக்க மாட்டாங்க. பு.த.க்கு ஏற்பட்ட முடிவை நினைத்தாலே அனைவரும் அரண்டு ஓடிடுவர்.


என்றும் இந்தியன்
மார் 13, 2026 16:47

மீடியாக்களுக்கு கொண்டாட்டம் நமக்கு கோணிச்சாக்கு நிறைய நிறைய அள்ளிக்கொடுக்க ஒருகாலத்தில் அன்னக்காவடியாக இருந்த ஒருவர் இப்போது பணம் அடிக்கும் மெஷினாக மாறியதை நினைத்து என்று இந்த செய்தித்துணுக்கை படிக்கவேண்டும்


Rajarajan
மார் 13, 2026 16:21

நாங்க உங்களுக்கு என்ன துரோகம் செஞ்சோம் ?? இவ்ளோ கிச்சு கிச்சு மூட்டினா, நாங்க தாங்க மாட்டோம். எங்களை விட்ருங்க ப்ளீஸ். சிரிச்சி சிரிச்சி வயிறு வலி தாங்க முடியல. ஆனால் ஒன்னு. நம்ம நாட்டுல மட்டும் தான் குற்றவாளிகளும் அரசியல்கட்சி ஆரம்பிச்சி, மீண்டும் கொள்ளையடிக்க வழிவகை இருக்கு.


duruvasar
மார் 13, 2026 16:14

திமுகா பணம் தருகிறது. போன தேர்தலில் இப்படி பணம் வாங்கிக்கொண்டு கட்சி ஆரம்பித்தவன் விண்வெளி நாயகன் எல்லாம் சாக்கடைகள்.


V Gopalan
மார் 13, 2026 16:12

Absolutely, it showed that these so called leaders have duped the late respec CM Jeyalalitha, till she was alive go on praising Amma Amma but now these four words of Amma is divided with each one of these are in different parties like Nellikkai Moottai and remained as a single coconut tree. The soul of late Iron Lady respec CM will not forgive them. The electorates of Tamilnadu must and should exercise their franchise in a be-fitting manner to retrieve the golden era of late CM Jeyalalitha.