/ மக்கள் மனசுல யார் / மக்கள் மனசுல யார்?
மக்கள் மனசுல யார்?
| ADDED : மார் 24, 2026 07:29 AM
வெற்றிடத்தை விஜய் நிரப்புவார்
வி ஜயின் அரசியல் பிரவேசம், இந்த தேர்தலில் ஓட்டு போட வேண்டும் என இளைஞர்களை துாண்டியுள்ளது. தமிழக அரசியலில் இதுவரை, மூன்றாவது அணி வெற்றி பெறவில்லை. அது இந்த தேர்தலில் நடக்கும். பெண்கள் அனை வரும் விஜய் பக்கம் தான் நிற்போம். அவரது வெற்றியை ஒவ்வொரு குடும்ப பெண்களின் வெற்றியாகத்தா ன் பார்ப்போம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி வெற்றிடத்தை விஜய் நிரப்புவார். இத்தேர்தலில் விஜய் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், தமிழகம் தலைநிமிரும். விசிலா, விசிறியா?
தி.மு.க., இன்றைக்கு, 22 கட்சிகளோடு கூட்டணி வைத்திருக்கிறது. எந்த காலத்தில், இத்தனை கட்சிகளுடன் தி.மு.க., கூட்டணி வைத்தது? விஜய் வருகையே அதற்கு காரணம். விஜய்க்கு கிடைத்த வரவேற்பு, தி.மு.க.,வை 22 கட்சிகளை தேடி ஓட வைத்திருக்கிறது. எங்கள் தலைவர் எரிமலை; எச்சில் துப்பி எரிமலை சாய்ந்ததாக சரித்திரமில்லை. ஆக்டோபஸ் கரங்களை விஜயால் மட்டுமே ஒடுக்க முடியும். சிவாஜிக்கே கள்ள ஓட்டு போட்ட ஊர் இது. விசிறியின் ஓசை வலிமையானது என்பதை நிரூபிக்க ஓட்டு போடுங்கள்; விசிறிக்கு வாய்ப்பளியுங்கள்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ப.சாமி
மார் 24, 2026 07:49
விசிறிக்கு வாக்களிக்கவா? யார் அந்த விசிறி?