விஜய் அறிவிப்பு வெத்து வேட்டு: அமைச்சர் கீதா ஜீவன் தாக்கு
துாத்துக்குடி: “த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை வெத்து வேட்டு,” என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி: எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைவருக்குமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி செய்து கொண்டு வருகிறார். சொன்னதை செய்வது மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்கிற தி.மு.க.,வைத்தான் மக்கள் நம்புவர். த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அறிவிப்புகள் அனைத்தும் வெத்து வேட்டு என்று தான் சொல்ல வேண்டும். ஒரே உதாரணம் சொல்கிறேன். 'பெண்கள், குழந்தைகள், முதியோருக்காக தனித்துறை' என விஜய் அறிவித்துள்ளார். ஏற்கனவே, பெண்கள், குழந்தைகள் முதியோர், திருநங்கையருக்கான தனித்துறையாகத்தான் சமூக நலத்துறை இருக்கிறது. இது கூட தெரியாமல் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஓரே மதம். கிறிஸ்தவர்கள் ஓட்டு. இனிமேல் இந்த அமைச்சர் தான் விஜய்க்கு தேர்தல் வரை பதில் தருவார்.
நீங்கள் 2021 கொடுத்து மக்களை ஏமாற்றி வாங்கிய வாக்கு ஞாபகம் இருக்கிறதா? இதை சொல்லுவதற்கு ஒரு அருகதை வேணும். கேவலம்.
மேலும் செய்திகள்
தேஜ கூட்டணி பிரபலம் அடைவதால் திமுகவுக்கு அதிர்ச்சி: பிரதமர் மோடி
மார் 10, 2026 04:50 pm
நோயை விட கொடுமையானது ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
மார் 10, 2026 02:12 am