உதயசூரியனா... டார்ச் லைட்டா...? தீவிர யோசனையில் கமல் கட்சி
சென்னை: தி.மு.க., தொகுதி பங்கீடு பேச்சு குழுவிடம், மக்கள் நீதி மய்யத்தின் தொகுதி பங்கீடு பேச்சு குழு, 12 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை அளித்துள்ளது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதா? டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதா என்பது பற்றி, விரைவில் முடிவெடுப்பதாகவும் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், அதன் தொகுதி பங்கீடு பேச்சு குழுவினருடன், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, பொதுச்செயலர் அருணாசலம் ஆகியோர் பேச்சு நடத்தினர். அப்போது, 12 தொகுதிகளின் பெயர் கொண்ட விருப்ப பட்டியலை வழங்கினர்.
எங்களுக்கும் 'சீட்' வேண்டும்!
தி.மு.க., தொகுதி பங்கீடு பேச்சு குழுவை, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்தனர். பின்னர் வசீகரன் அளித்த பேட்டி: ஜனநாயகத்துக்கு ஆபத்து விளைவுக்கும் வகையில் பா.ஜ., செயல்படுகிறது. அந்த கட்சியால், ஆம் ஆத்மி பாதிக்கப்பட்டது. எங்கள் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆதாரமே இல்லாமல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தமிழக மக்களையும் ஏமாற்றி விடலாம் என பா.ஜ., கருதுகிறது. கட்சி பெரிதா, நாடு பெரிதா என்ற கேள்வி எழுந்தபோது, நாடு தான் பெரிது என முடிவெடுத்து, 'இண்டி' கூட்டணியில் இணைந்தார் கெஜ்ரிவால். அதேபோல், நாங்களும் முடிவெடுக்கிறோம். இந்த முறை எங்களுக்கு தி.மு.க., ஒரு வாய்ப்பு தரும் என நினைக்கிறோம். கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வரை பிரசாரத்துக்கு அழைத்து வருவேன். எங்கள் உயரத்துக்கும், தகுதிக்கும் ஏற்ற அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறோம். நாங்கள் தேசிய கட்சி என்பதால், துடைப்பம் சின்னத்தில் போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஹ ஹ ஹ.......அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. இத்து போன பல்ல தட்டறதுக்கு ஈக்குமாறு வேணுமா வெளக்குமாறு வேணுமா கதையாச்சு கமலு, உன் நிலைமையை நினைச்சா சிரிப்போ சிரிப்புடா
ஊழல் திமுக காசுக்கு செம்பு துக்கும் அடிமைகள் பலவிதம்....அவை சைமன், கமல், ஜேக்கப் விசை...மக்களே உஷார்
desolve the party as many have already joined DMK
உதய சூரியன்தான் அதிலென்ன சந்தேகம் .
சுயமரியாதை உள்ளவர்களுக்கு மட்டுமே சொந்த கட்சியின் சின்னம் தேவை! அடிமைகளுக்கு சொந்த சின்னம் தேவையில்லை!!
உதயநிதி சூரியன் தான். பிச்சை எடுத்துத் தானே ஆக வேண்டும் !!!!!
தூக்குக் கயிறு அல்லது விஷமா
கப்பறை நம்முடையது, அது வாங்க காசு கொடுத்தது அவங்க
நீயும், உன் ஆளுங்களும் எந்த சின்னத்தில் நின்னாலும் டெபாசிட் கிடைக்க போறதில்லை. இதுல சின்னம் என்ன வேண்டி கிடக்கு.
யோவ் கமல் செம காமெடி அய்யா நீ. உனக்கு என்ன இருக்குன்னு இந்த பில்ட்ப்பு
மேலும் செய்திகள்
ராஜ்யசபா தேர்தல்: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் உதவியாளர் வேட்புமனு
மார் 05, 2026 04:58 pm
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது; முதல்வரின் கை சைகையை விமர்சித்த இபிஎஸ்
மார் 05, 2026 01:45 pm
திமுக கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மார் 05, 2026 12:58 pm