இடியை இறக்கிய மத்திய அரசு
மத்திய அரசு, நாடு முழுதும், சமையல் காஸ் சிலிண்டருக்கு, 60 ரூபாய் உயர்த்தி உள்ளது. ஏற்கனவே, மத்திய அரசின் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட வரிக் கொடுமையாலும் விலைவாசி உயர்வாலும், மக்கள் துன்பப்படுகின்றனர். தற்போது, சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு, காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி, மக்கள் தலையின் மீது, மத்திய அரசு இடியை இறக்கியுள்ளது. இந்த விலை உயர்வினால், சங்கிலித் தொடர் போல், உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயரும் ஆபத்து உள்ளது. - சண்முகம், மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விலைகள் உயரும் என்று ஆருடம் சொல்லும் இந்த மனிதர், சில ஆண்டுகளாக செத்துப்போய் மணிமண்டபம் கட்டப்பட்ட கம்யூனிஸ கொள்கைகளை மத்திய அரசை எதிர்க்கும் போது மட்டும் பேசுபவர் இவர்..அடிப்படை முதலாளித்துவம், அதன் பின்இணைப்பாக வரும் குடும்ப அரசியல், ஜாதி அரசியல், சிறுபான்மையினரை சரிக்கட்டும் கேவல அரசியல் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து செயல் வடிவம் தரும் விடியல் அரசின் குறைபாடுகள் உங்கள் கண்ணுக்கு தெரியவே தெரியாது. அகில உலக நிகழ்வுகள். அதனால் ஏற்படும் விளைவுகளைக் கூட புரிந்து கொள்ள மறுக்கும் கேவல அரசியல் செய்வதால் உங்கள் மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் காணாமல் போகும்.
இதுபோன்ற ஆட்களால் விலைவாசி ஏற்றாமல் சமாளிக்கலாம் என இருக்கும் வணிகர்களும் விலைகளை ஏற்றுவர்.
ஏனய்யா உங்க சுடலின் கிட்ட சொல்லி அவரு என் காஸ் மேல வரி போடுறாருன்னு கேட்குறதுதானே.
இதற்குத்தான் ஐயா, பள்ளிப்படிப்பையாவது முடிக்க வேண்டும் என்பது இப்போது பாருங்கள், எதற்காக கச்சா எண்ணெய், எரிவாயு விலைகள் உயர்ந்தன என்று புரியாமல் உள்ளீர்கள்!
உமது ஆதரவு நாடான ஈரானிடம் போய் கேளும்...
த.வெ.க., தலைவர் விஜயை தமிழக மக்கள் நிராகரிப்பர் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு கருத்து
மார் 09, 2026 05:33 am
ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்து திமுக நிர்வாகி குடித்தனம்; அண்ணாமலை கண்டனம்
மார் 09, 2026 12:26 pm