/ செய்திகள் /  தி.மு.க.,வை விமர்சித்து குறும்படம்

 தி.மு.க.,வை விமர்சித்து குறும்படம்

சென்னை: 'நமக்கு நாமே பாதுகாப்பு; தி.மு.க.,-வை நம்புவது மகா தப்பு' என்ற பிரசார குறும்படத்தை அ.தி.மு.க., வெளியிட்டுள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவங்கி விட்டன. முதல்வர் ஸ்டாலின், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களுக்கு காது குத்துவது போல் அ.தி.மு.க., 'வீடியோ' வெளியிட்டது. இந்நிலையில், சட்டம் - ஒழுங்கை விமர்சித்து, 'நமக்கு நாமே பாதுகாப்பு; தி.மு.க.,-வை நம்புவது மகா தப்பு' என்ற பிரசார குறும்படத்தை, அ.தி.மு.க., நேற்று வெளியிட்டது. அதில், பெண்கள் கோலம் போடும்போது செயின் பறிப்பு நடப்பதால், வீட்டில் உள்ள ஆண்கள் கோலம் போடுவது போன்ற காட்சிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !