/ செய்திகள் / ரோட்டி்ல் ஆக்கிரமிப்பு; தேர்தல் பார்வையாளர் கோபம்

ரோட்டி்ல் ஆக்கிரமிப்பு; தேர்தல் பார்வையாளர் கோபம்

காரியாபட்டி:திருச்சுழி சட்டசபை தொகுதி தேர்தல் பார்வையாளர் சஞ்சீவ் ஸ்ரீ வாஸ்தவா, காரியாபட்டி ஆவியூர் சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் எவ்வாறு சோதனை செய்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்தார். ஆவியூர் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். காரியாபட்டி ஒன்றிய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதை பார்வையிட சென்றபோது ஒன்றிய அலுவலக ரோட்டில் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன. இதனால் கோபமடைந்து, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை வரவழைத்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அடுத்த முறை வரும்போது ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது என தெரிவித்தார். கல்குறிச்சி வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்து சென்றார். உதவி தேர்தல் அலுவலர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !