/ செய்திகள் / சிதம்பரத்தால் உருவான திமுக கூட்டணி; சோனியா - ராகுல் இடையே மனக்கசப்பு

சிதம்பரத்தால் உருவான திமுக கூட்டணி; சோனியா - ராகுல் இடையே மனக்கசப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

ஒருவழியாக, தி.மு.க., காங்., கூட்டணி முடிவாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம், முன்னாள் அமைச்சர் சிதம்பரம். அவர் முயற்சி எடுக்காவிட்டால், இன்று இந்த கூட்டணி தொடர்ந்திருக்காது. நடிகர் விஜய் பக்கம், காங்., போய்விடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சிதம்பரம்.ஆனால், இது ராகுலுக்கு பிடிக்கவில்லை. அவருக்கும், சிதம்பரத்திற்கும் ஏற்கனவே ஆகாது. 'வெறும் 28 சீட் தானா... இரண்டு ராஜ்யசபா சீட் கொடுத்திருக்க வேண்டும்' என, சிதம்பரத்திடம் கூறினாராம் ராகுல்.இதனால், சிதம்பரத்தின் மீதான வெறுப்பு ராகுலுக்கு, தி.மு.க., கூட்டணி விவகாரத்திற்குப் பின் அதிகமாகி விட்டது. இன்னொரு பக்கம், இந்த விவகாரம் சோனியா- - ராகுல் இடையே மனக்கசப்பையும் உருவாக்கி விட்டதாம்.சோனியாவிடம் நேரடியாக பேசி, அவரை, 28 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு சம்மதிக்க வைத்து விட்டார் சிதம்பரம். இதை ராகுல் ஏற்கவில்லை என்றாலும், 'தி.மு.க.,வுடன் தான் நம் கூட்டணி தொடர வேண்டும்' என கறாராக சொன்னாராம் சோனியா. இவருக்கு தி.மு.க., மீது ஒரு பாசம்.'டில்லியில் சோனியா வசிக்கும், 10 ஜன்பத் பங்களா எப்போதும் சிதம்பரத்திற்காக திறந்திருக்கும். ஆனால், சுனேரி பாக்கில் உள்ள ராகுல் பங்களாவின் கதவுகள், சிதம்பரத்திற்கு மூடப்பட்டு விட்டன' என்கின்றனர் காங்., மூத்த தலைவர்கள்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Naga Subramanian
மார் 09, 2026 07:32

பாரதத்தின் டிரம்ப் என்று ராஹுலை அழைக்கலாம். ராஹுல், இனிமேல், ஹாங்காங் தாய்லாந்து என்று ஆன்மிக பயணம் மேற்கொள்வார் என்று கட்டாயம் எதிர்பார்க்கலாம். பிறகு, தேர்தலுக்குப் பிறகு திரும்பி வந்து, மறந்து போய், தாமரைக்கு வாக்கைச்செலுத்தி விட்டீர்களா என்று தமிழக மற்றும் மேற்கு வங்காள மக்களைக் கேட்டு ஊர்ஜிதப் படுத்திக் கொள்வார்.


duruvasar
மார் 08, 2026 15:47

கார்த்திக் சிதம்பரம் எதிர்காலத்திற்கும் சேர்த்து உலை வைத்துவிட்டார் சீனா பான


V.Mohan
மார் 08, 2026 15:32

அம்மா மகன் மனக்கசப்பு ஒருபுறம் இருக்கட்டும். அய்யா, இந்த திராவிட மாடல் எம் பி க்களுக்கு முண்டா தட்டும் ராகுல் காந்தியை ரொம்பவும் பிடித்து விட்டது என்று நினைக்கிரேன்.


P SenthilKumar
மார் 08, 2026 12:30

சிதம்பரம் காங்கிரஸை காப்பாற்றி விட்டார்


Ganesh S
மார் 08, 2026 14:36

ஓரு பெண்ணின் தாயாக விஜயின் தவெகவுடன் கூட்டணியில்லை என்று ஸோனியா எடுத்த முடிவு சரியே.


Rathna
மார் 08, 2026 11:27

தனக்கு மற்றும் தனது மகனுக்கு பாராளுமன்ற மற்றும் ராஜ்ய சபா சீட்டை உறுதி செய்து கொண்டார். ஆனால் இது தமிழகத்திற்கு நல்லதா?


Rajah
மார் 08, 2026 10:38

இலங்கைத் தமிழர்களை பழிவாங்குவதற்கு உதவிய திமுகவினர் மீது சோனியா அம்மையாருக்கு ஓர் தனிப் பாசம் உண்டு.


vivek
மார் 08, 2026 10:36

என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று கூறப்படுகிறது


Sundar R
மார் 08, 2026 10:20

தமிழகத்தில், மெக்கானிக்குகள் ஜம்மென்று பேண்ட், டி-ஷர்ட் போட்டிருக்கிறார்கள். ஒரு பேண்டும், ஒரு டி-ஷர்ட்டும் போட்டுக்கொண்டு, ஒரு பேண்ட் பாக்கெட்டில் ஸ்பேனரையும், இன்னொரு பாக்கெட்டில் ஸ்க்ரூ டிரைவரையும் போட்டுக்கொண்டு ஒரு மெக்கானிக்கைப் போல் பாராளுமன்றத்திற்குள் சென்று விவாதம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ள ராகுல் காந்தி, தமிழகத்தில் காங்கிரஸ், எதிர்வரும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேரக்கூடாது என்பதில் இறுதிவரை கறாராக இருந்தது மிகவும் பாராட்டுக்குரியது. HATS OFF TO RAHUL GANDHI. மேலும், சோனியா காந்தி அவர்கள் சிதம்பரம் நடராஜரை வழிபடுவதை விட்டுவிட்டு, சிதம்பரம் செட்டியார் அவர்களையும், அவருக்கு உபரியாக செல்வப் பெருந்தகை அவர்களையும் அறிவல்லாத்த ஆலயத்திற்குச் சென்று திமுகவோடு கூட்டணி போடுவதைத் தடுத்ததும், அது இயலாத நிலையில், சோனியா அவர்களிடம் ராகுல் காந்தி சினம் கொண்டதும் பாராட்டுக்குரியது.


Ms Mahadevan Mahadevan
மார் 08, 2026 09:37

பப்பு வேஸ்ட்


vbs manian
மார் 08, 2026 09:27

மணிசங்கர் இல்லாத குறையை தவிர்த்து விட்டார். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த நன்மையையும் தராத அபூர்வ ஜாதகம். தமிழகத்தை இன்னும் சில காலம் இருளில் தள்ள கைங்கர்யம் செய்த பெருமான்.