/ செய்திகள் /  பிரதமர் மோடி வரும் 11ல் திருச்சி வருகை

 பிரதமர் மோடி வரும் 11ல் திருச்சி வருகை

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணி சார்பில், வரும் 11ம் தேதி திருச்சியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தனது அறிக்கை வாயிலாக உறுதி செய்து உள்ளார். பிரதமர் மோடி, இம்மாதம் 1ம் தேதி புதுச்சேரி மற்றும் மதுரையில், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்ததுடன், பிரசார கூட்டங்களிலும் பங்கேற்றார். இந்நிலையில், மீண்டும் தமிழகம் வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !