தி.மு.க.,விற்கு போட்டியாளரே கிடையாது: சொல்கிறார் பன்னீர்செல்வம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சிவகங்கை: தமிழக சட்டசபை தேர்தலில் இன்றைய சூழலில் தி.மு.க.,விற்கு தகுதியான போட்டியாளரே கிடையாது என காளையார்கோவிலில் தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் அவர் கூறியதாவது: 5 ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்வராக இருந்து ஸ்டாலின் ஆற்றிய பல்வேறு திட்டங்கள் நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கிற திட்டங்களாக உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலில் தி.மு.க.,விற்கு எதிராக எந்த அரசியல் கட்சியும் போட்டியிடக்கூடிய தகுதி இல்லை. அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பழனிசாமி ஒரு சுயநலவாதி. ஒரு தலைவர் அனைத்து மக்களையும் அனைவரையும் அரவணைப்போடு நடத்திச் செல்ல வேண்டும். அந்த பண்பாடு பழனிசாமியிடம் இல்லை. அ.தி.மு.க.,வை படுகுழியில் தள்ளியவர் பழனிசாமி. அ.தி.மு.க.,வை எங்கு கொண்டுபோய் அடகு வைத்துள்ளார்கள் என்பதை நாட்டு மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். சாதாரண தொண்டனாகத் தான் தி.மு.க.,வில் இணைந்து இருக்கிறேன். விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார். சட்டசபை தேர்தலில் தனித்துத்தான் போட்டியிடுவோம் என்று சொல்லியிருக்கிறார். மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆட்சியாக ஸ்டாலின் ஆட்சி இருக்கிறது என்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 41 )
நீ ஒரு மனுஷனே கிடையாது
எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மா அழுவது தெரியவில்லையா? இப்படி ஒரு பொழப்பு தேவையா? மக்கள் மன்னிப்பார்களா உங்களை?
உண்மையான அரசியல்வாதி இவர்தான் - நாடும் நாட்டுமக்களும் நாசமாக போகட்டும் ஏன் குடும்பம் என் மகன் நல்ல இருந்தபோதும் அல்லது ஆட்டயப்போட்ட சொத்துக்கு ஒரு தற்காப்புக்கு அரசியலில் ஒரு ஆடுபுலியாட்டம்... மக்கள் உணர்கின்ற வரை உங்கள்-வீட்டில் எப்போதும் விறகு எரியும் அய்யா நல்லா இருங்க இந்த பாமரமக்களின் சாபம் ஒருத்தனையும் விட்டுவைக்காது...
பன்னீர்செல்வம் கடந்த சில வருடங்களாக அரசியலில் அந்தந்த நேரத்தில் அவருக்கு சாதிக்க கிடைத்த பல சந்தரபங்களை சரிவர பயன்படுத்தாமல் எந்த முடிவையும் உரிய நேரத்தில் எடுக்க முடியாமல் தனது அரசியல் வாழ்வை வீணடித்து விட்டார். தனக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டது என்ற நிலை வந்து பின் இறுதியாக தி.மு.க.விடம் தஞ்சம் அடைந்துள்ளார். நாற்பதாண்டு கால நண்பர்களும் ஆதரவாளர்களும் தொகுதி மக்களின் ஆதரவும் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. இப்படி பட்ட நிலையில் தி.மு.க.வில் இவ்வளவு ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தவர்கள் திடீரென அவருக்கு தேர்தலில் எப்படி பணியாற்ற முன்வருவார்கள் என எதிர்பார்க்க முடியும்? எனவே எந்த பக்கமும் ஆதரவே இல்லாத நிலையில் அவர் இம்முறை ஜெயித்து சட்டமன்றத்திற்கு செல்வாரா?
ஐயோ பாவம் இது தேவையா அரசியலை விட்டே விலகி இருக்கலாம் இந்த அசிங்கம் இவருக்கு தேவையில்லை.
எலும்பில்லா நாக்கு என்ன வேண்டுமானாலும் பேசும். இப்படி பட்டவர்களைத்தான் அதிமுக உருவாக்கி உள்ளது.. வரும் தேர்தல் இவரை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரிய வரும்
வெட்கம் கெட்டவர். இவரை நம்பி கும்பல்
உன் நிலையை நினைத்தா பரிதாபமா இருக்கு பண்ணீரு...
இப்படிப் பேசினால்தான் அதிமுகவுக்கு அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்று திட்டமிட்டு பேசுகிறாரோ ????
ஜெயலலிதா ஆன்மா சபிக்கும்.
மேலும் செய்திகள்
ஒருதலைபட்சம்; அதிகாரிகள் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜய் புகார்
மார் 28, 2026 05:00 pm
ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுக்கு தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு
மார் 28, 2026 04:48 pm