பா.ஜ.,விடம் மனசாட்சியை அடகு வைத்த பழனிசாமி: ஸ்டாலின் கடும் தாக்கு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: “தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை காப்பாற்றிட, சிறுபான்மையின மக்களும், பெரும்பான்மையின மக்களும் சகோதரர்களாக வாழ வேண்டும்; அதற்கு முஸ்லிம்கள் அனைவரின் ஒற்றுமை, எந்நாளும் தொடர வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசியதாவது: தி.மு.க.,விற்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள உறவு, தி.மு.க., துவங்கிய நாளிலிருந்து ஏற்பட்ட உறவு. இந்த உறவு காலம் காலமாக தொடரும். நம் உறவை யாராலும் ஒரு நாளும் பிரிக்க முடியாது. தி.மு.க.,வின் பலமே பெண்கள் தான். மகளிர் நலனை முன்வைத்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. முஸ்லிம் சமுதாய பெண்கள் நம்மோடு இருக்கும்போது, இன்னும் பல மடங்கு பலம் பெருகிவிடும். இந்த மேடையில், அனைத்து சிறுபான்மை இயக்கங்களும் ஒன்றாக இருக்கின்றன. இந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது தி.மு.க., தான். நாடு முழுதும், சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறை குறித்து பழனிசாமி கருத்து கூட சொல்லவில்லை. அ.தி.மு.க., என்ற கட்சியுடன் சேர்த்து, அவரது மனசாட்சியையும் பா.ஜ.,விடம் அடகு வைத்ததுதான் வேதனையாக இருக்கிறது. சிறுபான்மையினர் மீதான வெறுப்பை துாண்டிவிட்டு, அதில் குளிர் காய்பவர்களுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்திருந்தால், எப்படி சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாப்பையும் நிலைநாட்ட முடியும்? பழனிசாமி மட்டுமல்ல, அவரைப் போன்ற பலரும் நோன்பு திறக்கிற ஒரு நாள் மட்டும் பங்கேற்று விட்டு, முஸ்லிம்களுக்கு இன்னல் ஏற்படும் போது ஓடி ஒளிந்து விடுகின்றனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 35 )
முதலில் இந்த இஸ்லாமியர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் வந்தாலோ அல்லது வருஷத்துக்கு ஒரு முறை இந்த நோன்பு கஞ்சி குடிப்பதால் இவர்கள் உங்களுக்கு எந்த அளவுக்கு துணையாக இருப்பார்கள் என்று யோசிக்க வேண்டும். உங்கள் ஓட்டு இவர்களுக்கு கிடைக்கும் வரை தான் இந்த கெட்டப். அப்புறம் மேக்கப்பை கலைத்துவிட்டு அடுத்து கிறிஸ்துமஸ்க்கு கேக் சாப்பிட போக வேண்டியது தான்
ஸ்டாலின் நீங்களும் மனசாட்சியை அடகுவைத்த காரணத்தினால்தானே கிடோங்கிரெஸ் மற்றும் கூட்டணிக்கட்சிகளுடன் சமாதானம் பேசுகிறீர்கள் . இதுவும் அப்படித்தானே
சுமார் 17 வருடங்கள் மத்தியில் எந்தக்கூட்டணி ஆட்சி செய்தாலும் அதில் பங்கு பெற்றோம்.. அப்போதெல்லாம் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்ப நலன்களை, வளங்களை வளர்த்துக் கொண்டோம். மாநில நலனைப் புறக்கணித்தோம். அந்த பச்சைத் துரோகம் யோக்கிய பச்சைகளுக்கு நினைவுக்கு வந்துட்டா நம்மளை புறக்கணிப்பாங்க தளபதி சார் ....
காங்கிரஸ் என்றால் காத தூரம் ஓடும் கருங்காலி கைத்தடி காவலுக்கு வைத்துள்ள, கருணாநிதியின் கடைக்கண் பார்வையினால், கருணை பெற்றவர் இனி கலி காலம் கழியும் வரை கைகூப்பி கையைப்பிடித்து காலம் கடக்க வேண்டியுள்ள கருப்பு சட்டைகள் காணாமல் போக போவது கண்கூடாய் தெரிகிறது .
நா சொல்லலே, இவர் தினமும் கண்ணாடி முன் நின்று தனக்கு தானே திட்டிக்கொள்வார்.
ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன கூடு விட்டு ஆவி போன பின்னே கூடவே வருவதென்ன - இந்த பாடல் உங்களுக்ககத்தான் அப்பா . தமிழகத்தில் பல நல்ல உள்ளங்கள் உங்களை தினமும் சபித்து கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்
Stalin ji dont bend too much to drink the Doppa may fall
முக்கிய மூலப்பொருள் பிரிவினை வாதம், தேசத்தை எதிர்ப்பது, வெட்கம் மானம் போன்ற உணர்வுகள் இல்லாத எண்ணம் எல்லாம் கலந்து இருக்கும்.
சரிடா அவராவாது மனசாட்சியை அடகு வைத்தார் உனக்கு மனசாட்சியே இல்லையே மத நல்லிணக்கத்தை பத்தி நீ பேசற எங்க ஹிந்து பண்டிகைகளுக்கு என்னைக்காவது கலந்து கொண்டு இருந்தியா, 2026 கண்டிப்பா உனக்கு ஆப்பு வைக்கல
யோக்கிய சிகாமணியாய் இருந்த மண்கொகன் சிங் அரசை நாரவைத்த பெருமை திமுகவையே சாரும் - அய்யோபாவம் அவர் - கறைபடிந்த திமுக மந்திரிகளால் கெட்டபெயர் வாங்கி - சோனியா அழுத்தம் காரணமாக சொல்லமுடியாமல் - மௌனகுருவாகி நின்றது உலகமே அறியும் தம்பி
மேலும் செய்திகள்
மூத்தவர் தகுதி பொருந்தாது! மா.செ.,க்கள் மத்தியில் ஸ்டாலின் ‛நறுக் பேச்சு
மார் 16, 2026 11:51 pm