முக்குலத்தோர் ஓட்டுக்களை அள்ள ஓ.பி.எஸ்., பலே ஸ்கெட்ச்
மதுரை: தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தென் மாவட்டங்களில் தன் பலத்தை காண்பிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மார்ச் 7ல் தனது ஆதரவாளர்களை முறைப்படி தி.மு.க.,வில் இணைக்கும் விழாவை நடத்த உள்ளார். இதன் மூலம் முக்குலத்தோர் ஓட்டுக்களை அள்ளவும், அ.தி.மு.க., முகாமில் தென் மாவட்ட முக்குலத்தோருக்கு முகமாக நம்பப்படும் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு 'செக்' வைக்கவும் பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.
ஆதரவாளர் பலத்தை காட்ட முடிவு
தற்போது ஸ்டாலினிடம் தன் பலத்தை காட்டி, தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவராக வலம்வர திட்டமிட்டுள்ளார் பன்னீர்செல்வம். இதற்காக மதுரையில் திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சிவரக்கோட்டை அருகே வரும் 7ம் தேதி, ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களை முறைப்படி இணைக்கும் விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான பூமிபூஜையும் நேற்று நடந்தது. அதில் அமைச்சர் மூர்த்தி, தேனி எம்.பி., தங்கத்தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த இணைப்பு விழா பின்னணியில் தற்போதைய திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு வரும் சட்டசபை தேர்தலில் கடும் நெருக்கடியை கொடுக்கும் திட்டமும் பன்னீர்செல்வத்திடம் உள்ளது. இதுகுறித்து பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது: ஜெயலலிதாவிடம் இருந்தபோது அவரிடம் காட்டிய பணிவு, விசுவாசத்தை பன்னீர்செல்வம் தற்போது ஸ்டாலினிடம் தொடரும் முடிவில் உள்ளார். அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தான் குறுகிய நாளில் இவ்விழாவை முடிவு செய்து ஸ்டாலின் பங்கேற்பையும் உறுதி செய்தோம். அவரும் 'சந்தோஷம், விழாவிற்கு வருகிறேன்' என உற்சாகமாக சம்மதம் தெரிவித்தார்.பழனிசாமியின் 'கணக்கு'
அ.தி.மு.க.,வில் தற்போது முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் அளிப்பதில் பழனிசாமி ஆர்வம் காட்டுவதில்லை என புகார் உள்ளது. உதயகுமாரை வைத்து தென் மாவட்டங்களை சரி செய்துகொள்ளலாம் என்பது பழனிசாமியின் கணக்கு. அவரது கணக்கை தவிடுபொடியாக்கும் வகையில் தான் உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியில் இணைப்பு விழாவை நடத்த பன்னீர்செல்வம் முடிவு செய்தார். தினமும் ஸ்டாலின், உதயநிதி குறித்து கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிடுவதை உதயகுமார் வழக்கமாக கொண்டுள்ளார். அவருக்கு 'செக்' வைக்கும் வகையில் பன்னீர்செல்வத்தின் இந்த முடிவை ஸ்டாலினும் வரவேற்பார். இதுதவிர மதுரையில் நடந்த சட்டசபை தொகுதி நிலவர ஆய்வில், முதல்வர் மருமகன் சபரீசன் திருமங்கலம் தொகுதியில் கண்டிப்பாக தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என 'அசைன்மென்ட்' கொடுத்துள்ளார். அதற்கும் பக்கபலமாக தன் ஆதரவாளர்கள் தி.மு.க.,வுக்கு துணை நிற்கவும், தென் மாவட்டங்களில் தனக்கு செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க ஒரு லட்சம் ஆதரவாளர்களை ஸ்டாலின் முன்னிலையில் திரட்டிக் காட்டவும் பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார் என்றனர்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 17 )
செல்வத்தை மன்னிக்கவே முடியல்லே. மற்றவர்கள் கட்சி மாறியதை போல இவர் கட்சி மாறியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஓட்டுக்காக இவர் செய்யும் பில்டப் மீட்டிங்கில் உண்மை விசுவாசிகள் வரமாட்டார்கள். நெகட்டிவ்வா போயி திமுகவுக்கு ஓட்டுக்கள் குறையுமே தவிர கூட வாய்ப்பில்லை.
எந்த ஆதரவ ஆட்கள் வரும் .....
பன்னீரு எந்த காலத்திலும் வெற்றி பெற்றதில்லை. போடியிலேயே செத்து செத்து பிழைச்சது மாதிரிதான் சென்ற முறை செயிக்க முடிந்தது. அதே தீமுகாகாரங்கதான் அங்கே கூட்டத்தில் கூடப்போறாங்க.
நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே அள்ளிவிட்டார் . Repeat செய்ய போகிறார் . பாஜக தயவில் சொல்லும்படியான ஓட்டுகளை பெற்றார் . ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வக்கில்லை
OPS மாதிரி இல்லாமல், முக்குலத்தோர் ஆட்கள் மானம் மரியாதை உள்ளவர்கள்
பசும்பொன் ஐயா அவர்களின் இனத்தில்தான் இந்த துரோகியும் உதிரத்துள்ளார். தன் சொந்த மக்களுக்கே தண்ணீர் கொடுக்க மறுத்து கிணற்றை மூடியவன் இந்தமகான். இன்றும் அவனுக்கு முட்டு கொடுப்பவர்கள் வெட்கப்படனும்.அதை வாக்குகளில் காட்டனும். ஸ்டாலின் தவறான முடிவு எடுத்து விட்டார் என்பதில் சந்தேகமே இல்லை.
முக்குலத்தோர் ஒரு நம்பிக்கை துரோகியை பதவி வெறிபிடித்த உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த புரட்சிதலைவரின் ஆலயத்தையே உடைத்த ஒருத்தனை ஏற்றுகொள்வார்களா???எடப்பாடி மீது ஆயிரம் மனதாங்கள்கள் இருந்தாலும் அவர் எந்த நேரத்திலும் கட்சிக்கு விசுவாசமாவே இருந்துள்ளார்.
A waste fellow, after the 70's is also greedy to get the power to serve a comedy piece, Stalin sir please don't give permission to contest at this time at least for him and his son
ஸ்டாலின் கணக்கு தப்பாகத்தான் முடியும். தென் மாவட்ட தலித்துகள் கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட, தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க ஸ்டாலின் என்றுமே பரிந்துரைத்ததில்லை. அண்மையில் மதுரையில் திறக்கப் பட்ட பாலத்திற்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டுவதை ஸ்டாலின் தவிர்த்தார். தேவர் பெயரை தவிர்க்கவே அய்யா நேதாஜி பெயரை பாலத்திற்கு வைத்தார். தேசத்தந்தை நேதாஜி ஒரு மகான். அவர் பெயரை சூட்டிய ஸ்டாலினுக்கு நோக்கம் வேறு. தனக்கு ஆதாயம் இல்லாமல் ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடமாட்டார் ஸ்டாலின். ஏதோ அந்த O.பன்னீர் செல்வத்தை தேவர் திருமகனார் அளவுக்கு உயர்த்திப் பிடித்து பில்டப் கொடுக்க நினைக்கிறார் ஸ்டாலின். பன்னீரை நம்பி நட்டாற்றில் இறங்கி விட்டோமே என்பதை கூடிய விரைவில் உணருவார் ஸ்டாலின். சொந்தக் கட்சியினரும், தென்மாவட்ட மக்களுமே அதை ஸ்டாலினுக்கு உணர வைப்பார்கள்.
உண்மை.
முக்குலத்தோர் யாரும் இந்த OPS என்கிற துரோகியை மன்னிக்க மாட்டார்கள். அதனால் அவர்களின் ஓட்டுக்களை அள்ளலாம் என்கிற இவரின் கனவு கானல் நீர்தான். இவரை தன் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால் வழக்கமாக திமுகவிற்கு விழுகிற ஓட்டும் கூட கிடைக்காமல் போவதற்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுவரை இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டு பழகிய மக்கள் இந்த ஓ.பி.எஸ் கட்சி மாறி திமுகவில் சேர்ந்து விட்டதால் மட்டும் உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டுவிட மாட்டார்கள்.
மேலும் செய்திகள்
ராஜ்யசபா தேர்தல்: அன்புமணிக்கு போட்டியாக ராமதாஸ் உதவியாளர் வேட்புமனு
மார் 05, 2026 04:58 pm
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது; முதல்வரின் கை சைகையை விமர்சித்த இபிஎஸ்
மார் 05, 2026 01:45 pm
திமுக கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மார் 05, 2026 12:58 pm