ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி; தஞ்சையில் விஜய் கடும் தாக்கு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர்: ''ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என்று சின்னப்பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க,'' என தஞ்சையில் நடந்த பிரசார கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் பேசினார்.
ஒர்க்அவுட் ஆகாது
உடனே விஜய் பாஜவுக்காக பேசுகிறார் என்று திரித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். நமது சிறுபான்மை சகோதரர்களை பயமுறுத்தி ஏமாற்று வேலையை செய்கின்றனர். இனிமேல் அவர்களால் தொடர்ந்து செய்ய முடியாது. சென்னையில் டில்லி, டில்லி என்று கூவுவதும், அடிக்கிற கொள்ளைக்கு ரெய்டு வந்துவிட்டால், டில்லிக்கு வெள்ளைக் குடை பிடிப்பதும், இது எல்லாம் யார் என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும். தமிழகத்தை காப்பாற்றுவது திமுக தான்; ஸ்டாலின் தான் என்று சொல்கின்றனர். இதெல்லாம் ஒர்க்அவுட் ஆகாது பாஸ்!திமுக தீயசக்தி
ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என்று சின்னப்பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. கிரிக்கெட்டில் கூட தமிழக அணியை டில்லி அணியால் தொட்டு கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டிலும் விசில் போடுவது தமிழகம் தான் சிஎஸ்கே. வர போகும் தேர்தலில் விசிலை போட போவது நமது தவெக தான். தமிழகம் தான் தவெக. தவெக தான் தமிழகம். இந்த அணி, டில்லி அணி எல்லாம் நொறுங்கும். தவெக அடித்து நொறுக்கும். எனக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவில் யாரும் உள்ளே நுழைய முடியாது.அப்பா - பிள்ளை உறவு
இது ஒரு அம்மா, பையன் உறவு, அப்பா - பிள்ளை உறவு. அண்ணன்- தங்கை, அண்ணன் தம்பி உறவு. இது தேர்தலுக்காக வந்த உறவு இல்லை. இயற்கையாக அமைந்த உறவு. இதனை தமிழக மக்களும், நானும் உணர்ந்து இருக்கிறோம். மற்றவர்களுக்கு வேணும் என்றால் இது தேர்தல்; எனக்கு மற்றும் மக்களுக்கும் இது ஒரு எமோஷன். ஊழலற்ற, உண்மையான, சமூகநீதியை நிலைநாட்ட நம்ம ஆட்சியை நீங்க அமைப்பீர்கள் தானே? விஜய்க்கு வாய்ப்பு கொடுப்பீர்கள் தானே?அடுத்த ஜென்மத்தில்
இந்த விஜயை நம்புகிறீர்கள் தானே, ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் பறக்கும் தானே! அந்த விசில் சத்தம் ஒவ்வொரு பூத்திலும் புயலாக ஒலிக்கும் தானே? உடம்பு சரியில்லாத போது தான் டாக்டரை நினைப்போம். பிரச்னை என்றால் வக்கீலை தேடி போவோம். இது மனிதனின் இயல்பு. நாம் சாப்பாடும் போது ஒருவர் பற்றி யோசிப்போம். அது யாரும் இல்லை. விவசாயிகள். அவர்கள் பார்ப்பதற்கு வேண்டுமானால், சாதாரணமாக இருப்பார்கள். அவர்கள் சாதாரண ஆள் கிடையாது. கடவுளுக்கே படையல் போடுபவர்கள் விவசாயிகள். அடுத்த ஜென்மத்தில் விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விவசாயிகளை பற்றி எனக்கு தெரியாது ஒத்து கொள்கிறேன். மற்றவர்கள் மாதிரி நானும் டெல்டாகாரன் என்று உங்கள் காதில் டால்டா ஊற்ற நான் வரவில்லை. எனக்கு விவசாயம் பற்றி தெரியவில்லை என்றாலும் அவர்கள் படுகிற கஷ்டம் எனக்கு தெரியும்.தமிழகமே திவால்
நமது ஆட்சி அமைந்ததும் தீர்க்க வேண்டிய பிரச்னைகளில் விவசாய பிரச்னைகளும் ஒன்று. தண்ணீர் திவால் என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதனை படிக்கும் போது பகீர் என்று இருந்தது. அதற்கு காரணம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்காமல் விட்டது தான் காரணம். மணல், கனிம வளங்களை கொள்ளை அடித்தால் வேறு என்ன நடக்கும்?மணல் கொள்ளையர்கள் மீது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட் சொன்னதை நீங்கள் மறந்து விட்டீர்களா? மணல், கனிம வள கொள்ளைக்கு மணல் மாபியா குழு தான் காரணம் என்று மதுரை ஐகோர்ட் கிளை கூறியதை மறந்துவிட்டீர்களா? மணல் மாபியா குரூப்புக்கு திமுக ஆதரவு அளிப்பதை இல்லை என்று யாரும் சொல்ல முடியுமா? தண்ணீர், மணல், கனிமவளம் என மொத்த தமிழகமே திமுக ஆட்சியில் திவாலாக போகிறது.மானே, தேனே...!
கடன் மேல் கடன் வாங்கி உங்களது அரசே படுத்துவிட்டது. பரந்தூர் விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? பெரிய, பெரிய திட்டங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்த உடனே செய்ய மாட்டார்கள், ஆட்சி முடியும் போது தான் செய்வார்கள். மக்கள் மீது அக்கறை இருந்தால் ஆட்சிக்கு வந்த உடனே பெரிய திட்டங்களை ஆரம்பிக்க வேண்டியது தானே? ஆட்சிக்கு வந்து உடன் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டாமல் முடியும் போது அடிக்கல் நாட்டுகிறீர்கள். ஓட்டுக்காக நீங்கள் என்ன பேசினாலும் மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் என்று நினைத்தீர்களா? மீனவர்கள் பிரச்னைக்காக, மானே, தேனே, பொன் மானே போட்டு அவ்வப்போது கடிதம் எழுதி விட்டு துாங்க போய் விடுவார்.விஜய் வந்தால் நமக்கு பிழைப்பு போய்விடும் என்று இரண்டு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. என்னை முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜயை முடக்க முடியாது.திமுக தொடர்ந்து 2வது முறை ஆட்சிக்கு வருவது என்பது நடக்கவே நடக்காது; கருணாநிதியாலயே முடியவில்லை. 'அடுத்து நாங்க தான் என கூறும் யாராவது நாங்க ஊழல் செய்யாதவர்கள், ஊழல் செய்ய மாட்டோம்', என மனசாட்சியோட சொல்ல முடியுமா?கமிஷன் இருக்காது
தவெக ஆட்சியில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் வீணாவதை பார்த்துக் கொண்டு இருக்காது. மூட்டை ஏற்றி இறக்க ஒரு பைசா கமிஷன் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். கமிஷன் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுப்போம். கல்வி, மருத்துவம், ரேஷன், சாலை, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு தவெக முன்னுரிமை.விவசாயிகள் எதிர்க்கும் எந்த திட்டமாக இருந்தாலும் தவெக ஆட்சியில் நிராகரிக்கப்படும் தென் மாவட்டத்தில் ஒரு ஊரில், உங்கள் தந்தைக்கு சிலை வைக்க முயற்சி செய்தீர்களே! அப்போ என்ன கேட்டாங்க சுப்ரீம் கோர்ட்டில்? 'மக்கள் பணத்துல யாருக்கு புகழ் பாட பார்க்கிறீங்க' என்று கேட்டாங்களே, அதற்கு என்ன அர்த்தம்? ஊரான் வீட்டு நெய்யுல உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க என்று அர்த்தம். இவ்வாறு விஜய் பேசினார்.விஜய் வாக்குறுதிகள்!
* தவெக ஆட்சியில் உர தட்டுப்பாடு இருக்காது. * 5 ஏக்கருள்ள விவசாயிகள் பயிர்க்கடன் ரத்து; அதற்கு மேல் உள்ள விவசாயிகள் பயிர்க்கடனில் 50 சதவீதம் வரை ரத்து செய்ய சாத்தியக்கூறு ஆராய்ந்து நடவடிக்கை. * திமுக மாதிரி எல்லாருக்கும் என்று சொல்லி விட்டு, அதில் தகுதி நிர்ணயித்து ஏமாற்ற மாட்டோம். * 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில அரசு, மத்திய அரசு ஊழியராக இல்லாமல் இருந்தால், அவர்களது குழந்தைகளின் முழு கல்விச்செலவையும் அரசே ஏற்கும். * விவசாயிகள் விருப்பத்துக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும், ஒன்றிய அரசின் நெருக்கடியே இருந்தாலும், அந்த திட்டத்தை நிராகரிப்போம். * தவெக ஆட்சியில் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஏற்றி இறக்க ஒரு பைசா கமிஷன் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். * 500 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடை ஏற்படுத்துவோம். ஆண்களுக்கு ஆண் எடையாளர்; பெண்களுக்கு பெண் எடையாளர் இருப்பர். * ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து விற்பனை செய்யப்படும். * மீனவர்களுக்கு மத்திய அரசு சட்டப்படியான பாதுகாப்பு தர வேண்டும். அதற்கு உணர்வு பூர்வமான அழுத்தம் தருவோம். * கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், சாலை, பஸ் வசதிகளுக்கு அரசு முக்கியத்துவம் தரப்படும்.விஜய் வேணுமா? ஸ்டாலின் சார் வேணுமா?
பிரசாரத்தில் விஜய் பேசுகையில், ''மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி திமுக ஆட்சி. மக்களை நேசிக்கும் விஜய் வேணுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேணுமா? இந்த விஜயை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா? இந்த சத்தத்திற்கு ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும் என்று அர்த்தம் கிடையாது. தீய சக்தி திமுக ஆட்சி மறையட்டும் என்று அர்த்தம். தூய சக்தி தவெக ஆட்சி வரட்டும்'', தெரிவித்தார்.விஜய் உறுதிமொழி!
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது, எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம். இது நிஜம்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்தஞ்சாவூரில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசியது தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 47 )
சின்ன பசங்களுக்கு ஓட்டு இல்லை.. ஒரு ஓட்டு அதிகம் பெற்றாலும் வெற்றி வெற்றிதான்.. திமுகவின் உட்கட்டமைப்பு பற்றி தெரியாமல் பேச வேண்டாம்.. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் கட்சியே இல்லாமல் செய்து விடுவார்கள்.. தேர்தல் நேரம் என்பதால் மட்டுமே உங்களை வெளியே விட்டு வைத்திருக்கிறார்கள்.. சீமான் போல உங்களை எளிதாக கடந்து செல்ல முடியாது என்று அவர்களுக்கு தெரியும்.. உங்களை வளர விட மாட்டார்கள்.. கூட்டணி இல்லாமல் திமுகவே வெற்றி பெற முடியாது என்றால் நீங்கள் எல்லாம் எப்படி வெற்றி பெற முடியும்..
இவருக்கு அரசியலும் தெரியாது சொந்தமா பேசவும் தெரியாது . இவருடன் தமிழ் நாட்டில் எதனை மாவட்டங்கள் இருக்கிறது இந்தியாவில் எதனை மாநிலங்கள் இருக்கிறது என்பது கூட தெரியாது . எங்கே போனாலும் விசில் ஊதுவது போல தீய சக்தி என்று ஒரே ஒப்பாரி . இதை தவிர ஒரு களிமண்ணும் தெரியாது . இந்தத்தேர்தலில் DMK வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் இதுவரையில் ஸ்டாலினை வாய்க்கு வந்த படி பேசியதற்கும், பேசப்போவதற்கும் வட்டியுடன் கிடைக்கும் . அன்று தான் நாவடக்கம் தேவை என்பதை இந்த தற்குறி உணருவார்
சாத்தான்களுக்கும் அசுரர்களுக்கும் தீய சக்தியாக சுட்டெரிக்கும் சூரிய சக்தி தான் திமுகா என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
நீங்களும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூப்பிட ஆரம்பித்து விட்டீர்களா , ஸ்டிக்கர் ஓட்டும் கூட்டம் அங்கே இருக்குது , அதை தட்டிக்கேட்கும் கூட்டம் இங்கே ஆரம்பிடித்துள்ளது
கடந்த அரை நூற்றாண்டு காலமாக, திராவிட கட்சிகள் ஊழல் வழிகளில் கோடிகளை குவித்து வருகிறது. மது மற்றும் புரையோடி போயுள்ள ஊழல், ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர், கோழி பிரியாணி போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகம் சீரழிந்து கிடக்கிறது. சுதந்திரம் அடைந்த முக்கால் நூற்றாண்டு காலத்தில் தமிழக அரசின் கடன் ஐந்து லட்சம் கோடி மட்டுமே இருந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு ஐந்து லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. இந்த ஐந்து லட்சம் கோடி கடனை வாங்கிய திமுக அரசு, தமிழகத்தில் நிறைவேற்றிய முக்கியமான மக்கள் நலத் திட்டங்கள் என்ன என்பது மக்கள் மனதில் எழும் முக்கியமான கேள்வி ஆகும். இந்த சூழலில் புதிதாக அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய், அவர் நடிக்கும் படங்கள் திரைக்கு வரும் போது, அதிக விலையில் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதை கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் தமிழகத்தில் எப்படி ஊழலற்ற நல்லாட்சியை நடிகர் விஜய் வழங்குவார் என்பது மில்லியன் டாலர் கேள்வி
தமிழகத்திற்கு ஒரு 3 வது கட்சி கண்டிப்பாக தேவை. ஆனால் இவர் பேசும் வசனம் போணியாகுமா என்று தெரியவில்லை. இவர் வந்தால் மத மாற்ற கும்பல்கள் இங்கே பயங்கரமாக ஆட்டம் போடும் என்பது மட்டும் உண்மை.
திமுகவின் திருடர்களும், நாதகவின் தறுதலைகளும், தவெகாவின் தற்குறிகளும், தமிழகத்தின் சாபக்கேடு!
சூப்பர்
விஜய், உனக்கு துண்டுசீட்டு எழுதி தருபவர்களை உடனடியாக மாற்றிவிடு. நல்லா படிச்ச புத்திசாலி குரூப்புகளை நியமித்து, புதுமையான வாசகங்களை எழுதி வாங்கி படி. உன் பேச்சு மிகவும் பாமரத்தனமா இருக்கு.
வழக்கமான திராவிடம் பெரியார் பல்லவி பாடாமல் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்று சொல்கிறார். உண்மையான பிரச்சினைகள் பற்றி பேசுகிறார். நல்ல முன்னேற்றம். இன்னமும் நெல் மூட்டைகள் பல இடங்களில் திறந்த வெளியில் கிடக்கின்றன. மழை வந்தால் எல்லாம் அம்போ. குடோன் இல்லை. கழகம் வழக்கம் போல் ஆழ் உறக்கம்.
The recent controversy has not affected his following at all. On the contrary the youngsters appear to have redoubled their support to him. Paid crowd will not chase the leader’s car. But here the crowd goes berserk upon seeing Vijay. TN politics has changed course for sure.
மேலும் செய்திகள்
ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து படிக்கும் விஜய்; அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
மார் 04, 2026 06:05 pm
சுயமரியாதையை சீண்டி பார்ப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
மார் 04, 2026 01:11 pm