நிதிஷ் குமார் நிலைமை பழனிசாமிக்கு வரக்கூடாது
மத்திய பா.ஜ., அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. புதுப்பிக்கப்பட்ட விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் இன்னும் திறக்கப்படவில்லை. பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேர்மையான அரசியல் தலைவர். அவரை ராஜினாமா செய்ய வைத்து, ராஜ்யசபாவுக்கு மோடி அரசு அனுப்புகிறது. இதேபோன்ற நிலை, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு வரக்கூடாது. பதவி ஆசைக்காகவும், சி.பி.ஐ., அமலாக்கத் துறை ஆகியவற்றை வைத்து மிரட்டுவதாலும் பா.ஜ.,விடம் பழனிசாமி அடிபணிந்துள்ளார். தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வரக்கூடாது. கூட்டணி விவகாரத்தில், காங்., தலைவர் கார்கே எடுத்த முடிவை முழுமையாக ஏற்கிறோம். கூட்டணி கட்சிகளுக்கு உழைக்க தயாராக இருக்கிறோம். அனைத்து கட்சிகளுமே தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். அது தான் கூட்டணி தர்மம். பயிர்க்கடனை ரத்து செய்வதாக த.வெ.க., தலைவர் விஜய் கூறுவது, அனைத்து கட்சிகளும் அளிக்கும் வாக்குறுதி தான். - மாணிக்கம் தாகூர் காங்., - எம்.பி.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
யார் கியாரண்டி தரமுடியும்? தேர்தல் முடிந்து நடந்தாலும் நடக்கலாம்
மேலும் செய்திகள்
மகனுக்கு போட்டி: ராஜ்ய சபா தேர்தலில் உதவியாளரை வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தார் ராமதாஸ்
மார் 06, 2026 07:25 am