தோல்வி பயத்தில் தொகுதி மாறும் நாகேந்திரன்
தி.மு.க ., - காங்., உறவு நீண்ட காலமானது. கூட்டணி பேச்சுக்கு தி.மு.க., குழு அமைக்க காத்திருக்கிறோம். 'இண்டி' கூட்டணியின் முக்கியமான தலைவர் ஸ்டாலின். காங்., பொதுச்செயலர் வேணுகோபால் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களை சந்தித் ததால், மூத்த தலைவர்களை சந்திக்கவில்லை. அவர், முதல்வரை சந்திக்கும் திட்டம் இல்லை. அ.தி.மு.க., கூட்டணி சிவகாசியில் துவங்கி அனைத்து தொகுதிகளிலும், மூன்றாவது இடம் பிடிப்பது உறுதி. வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைவர்கள் பலர் போட்டியிடாமல் ஓட உள்ளனர். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், தோல்வி பயத்தில் தொகுதி மாற உள்ளார். அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. 1996ல் இருந்த நிலைமைக்கு பா.ஜ., சென்று விட்டது. விருதுநகர் தொகுதியில் இனி போட்டியிட மாட்டேன். எய்ம்ஸ் கட்டுமான பணி தாமதத்துக்கு காரணம் மாநில அரசு அல்ல; ஜப்பான் அரசின் விதிமுறைகள் தான். - மாணிக்கம் தாகூர், காங்., - எம்.பி.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
போதை இறங்கி விட்டது.....!!!
மேலும் செய்திகள்
திமுக கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மார் 05, 2026 12:58 pm
விவசாயிகளை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது; திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
மார் 05, 2026 12:08 pm