/ செய்திகள் / திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., ஆறு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில் வென்றது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், திருச்சி தொகுதியில், ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை, தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சொந்த சின்னம்

வரும் தேர்தலில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டால், ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள், சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால், இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என, தி.மு.க., தெரிவித்தது.கடந்த தேர்தலில் கொடுத்த தொகுதிகளை தர மறுப்பதுடன், ராஜ்யசபா சீட்டும் தராததால், வைகோ அதிருப்தி அடைந்தார். அவரது மகன் துரையின் ஆதரவாளர்கள், 'தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்' என, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.கூட்டணி பேச்சு, தொகுதிகள் எண்ணிக்கை போன்ற விவகாரங்கள் குறித்து சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர உயர்நிலை கூட்டம் நடந்தது. இதன் பிறகு வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக தலைமை அலுவலகம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்இதனைத் தொடர்ந்து மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.வைகோ கூறுகையில், ''நான்கு தொகுதிகள் கிடைத்தது மகிழ்ச்சி. கட்சியின் பதிவை தக்க வைக்க ஒரு தொகுதியில் மட்டும் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். மற்ற மூன்று தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிடுவோம்,'' என்றார்.https://x.com/dinamalarweb/status/2031738409455411589?s=20

அந்த 4 தொகுதிக்கு நன்றி!

தமிழக சட்டசபை தேர்தல்களில் மதிமுக போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை1996 - 177 (தனி அணி)2001 - 211 (தனி அணி)2006 - 35 (அதிமுக கூட்டணி)2011 - தேர்தல் புறக்கணிப்பு2016 - 28 (மக்கள் நலக்கூட்டணி)2021 - 6 (திமுக கூட்டணி)2026 - 4 (திமுக கூட்டணி)

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Sahadevan R
மார் 12, 2026 18:49

வலது கரமாக இருந்த திரு சத்யா அவர்களை இழந்ததால் இந்த நிலைமை. அடுத்த தேர்தலில் இதுவும் கிடைக்காது. மகனின் செயலால் மாற்று அணிக்கு சென்று இந்த நான்கு வெற்றி கூட கிடைக்காது.


gopal KRISHNAN
மார் 12, 2026 18:43

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை 177 தொகுதியில் போட்டியிட்ட கட்சி அதிமுக கூட்டணியில் 35 இடங்களை பெற்ற கட்சி 5 எம்பி பதவிகளை பெற்ற கட்சி இன்று தீ மூ க கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட இருப்பது மிகவும் கேவலமாக முடிவு வைகோ விற்கும் ஒரு இடம் புலி படை கருணாஸ் கட்சிக்கும் ஒரு இடம் இந்த மாதிரி ஒரு நபர் கட்சியை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்


PATTALI
மார் 12, 2026 18:37

அதுலேயும் ஒரு தொகுதியில பம்பர சின்னத்துலயும், மூணு தொகுதியில சூரிய சின்னத்துலயும் நிற்பாங்கலம். என்ன கொடுமைடா சாமி.


mohana sundaram
மார் 12, 2026 11:12

இவருடைய வார்த்தை ஜாலத்தில் மயங்கியவர் எத்தனையோ பேர்.


kr
மார் 12, 2026 07:29

MDMK got 1 seat is the correct headline. Paavam at this old age for all his acting and dialogue delivery, he could just get 1 assembly seat. The 3 seats contested on DMK symbol are technically that of DMK.


Gajageswari
மார் 12, 2026 05:21

வெட்கம் வெட்கம் வெட்கம்


NIyayanidhi
மார் 12, 2026 04:39

திமுக சின்னத்தில் கட்சிக்கு மதிமுக ன்னு பேரு ஒரு கேடா?


Shankar Sarangan
மார் 11, 2026 23:46

இந்த 4 சீட்டுக்குத்தான் கடந்த 5 வருஷமா கோபாலபுரத்துக்கு சொம்பு தூக்கிட்டு இருந்திருக்கார் போல.


Easwar Kamal
மார் 11, 2026 22:29

அடுத்த எலெக்ஷனுக்கு இந்த வைகோ கட்சியே இருக்காது போல. அப்பவே ஒரு படத்தில் டயலாக் வரும் வை. Go. வச்சுட்டு போ சரியாத்தான் சொல்லி இருகாங்க. அப்புறம் அந்த வீண்போன விஜயகாந்த் கட்சி வேற அதுக்கும் கூடிய சீக்கிரம் மூடு விழா. சொன்னமாதிரி விடியல் முடிச்சுட்டானுவ.


mindum vasantham
மார் 11, 2026 22:01

இவர் நாயக்கர், ரெட்டி தொழில் அதிபர்களுக்காக அரசியல் செய்வார்