அரசியலில் இப்போது விசுவாசம் குறைந்து விட்டது
பா.ம.க.,வைச் சேர்ந்த, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் முயற்சியால், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணிக்கு, நினைவு மண்டபம், உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, ஸ்டாலின் விசுவாசத்தோடு இருந்து வருகிறார். அரசியலில் இப்போதெல்லாம் விசுவாசம் குறைந்து விட்டது. ஆனால், இந்த நினைவு மண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற அனைவரும் அந்த கால அரசியல்வாதிகள் என்பதால், முன்பு உள்ளதை நினைத்து பார்க்கக் கூடியவர்கள். முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலத்திற்கு பின், தோழமை கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் பா.ம.க., இருந்தது. ஆனாலும், இன்றும் நன்றி மறவாமல், கோ.சி., மணிக்கு சிலையுடன் நினைவு மண்டபத்தை ஸ்டாலின் அமைத்து தந்துள்ளார். - நேரு, தமிழக அமைச்சர், தி.மு.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்போது தான் திமுகவில் சேர்ந்த தலைவரை சொல்கிறாரா அல்லது இவரிடம் பலன் பெற்று விசுவாசம் காட்டாத இவரது ஆதரவாளர்களையோ தலைவர்களையோ சொல்கிறாரா?
மேலும் செய்திகள்
திமுக திட்டங்களை காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிடும் கட்சிகள்: ஸ்டாலின் கிண்டல்
மார் 09, 2026 08:04 pm
த.வெ.க., தலைவர் விஜயை தமிழக மக்கள் நிராகரிப்பர் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு கருத்து
மார் 09, 2026 05:33 am