நான் சொன்னது ஆல் பினிஷ் அல்ல: முதல்வர் ஸ்டாலின் கல கல
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
- நமது நிருபர் -அமைச்சர் மகேஷ் இல்ல திருமண விழா தஞ்சாவூரில் நேற்று நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காங்கிரசுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்து, காரில் ஏறியபோது, 'ஓவர்' என கையை அசைத்தேன். அந்த 'ஆக்ஷனை' சமூக வலைதளங்கள் வாயிலாக பார்த்திருப்பீர்கள். அது திட்டமிட்டு செய்ததல்ல. காரில் ஏற வந்தபோது, கூடியிருந்த பத்திரிகையாளர்கள், 'முடிந்து விட்டதா?' என கேள்வி எழுப்பினர். அவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக, 'ஓவர்' என கையால் ஆக்ஷன் காட்டி பதில் அளித்தேன். அதை வைத்து, 'ஆல் பினிஷ்', அதாவது, 'அனைத்தும் முடிந்து விட்டது' என நான் சொன்னது போல வைரலாக்கி விட்டனர். நடந்த சம்பவத்துக்கு இது தான் என் விளக்கம். கூட்டணி கட்சியினரை திருப்திபடுத்தும் வகையில், இரு கட்சிகளுக்கு ராஜ்யசபா எம்.பி., வாய்ப்பை அளித்திருக்கிறோம். மறைந்த அமைச்சர் தர்மலிங்கம், தலைவர் கருணாநிதிக்கு பக்கபலமாக இருந்தார். தர்மலிங்கம் வழிவந்த என் நண்பன் பொய்யாமொழி, எனக்கு உதவிக்கரமாக இருந்தார். தற்போது மகேஷ், உதயநிதிக்கு பக்கபலமாக இருக்கிறார். இந்த குடும்ப உறவு, உதயநிதி - மகேஷுடன் நிற்காது. அவர்களுடைய மகன்கள் இன்பன் - இனியன் என வாழையடி வாழையாக தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கருணாநிதி, அன்பில், ஸ்டாலின், பொய்யா மொழி, உதயநிதி, மகேஷ் இப்ப இன்பன் மற்றும் இனியன், அப்புறம் துன்பன் மற்றும் துனியன் மொத்தத்தில தலைமுறை, தலைமுறையா உறவா இருந்து தமிழர்களை ஓட்டாண்டி ஆக்காமல் விடப் போவதில்லை இந்த திராவிடக் குடும்பங்கள்!
திமுக மீண்டும் ஆட்சியில் தொடர்ந்தால் ஆல் பினிஷ். அதாவது, தமிழகத்தில் இப்ப கொஞ்சம் விட்டுவைத்திருப்பது எல்லாவற்றையும் பினிஷ், அதாவது ஆட்டைபோட்டு விடுவார்கள்.
தமிழகத்தை மொத்தமா முடிச்சு உட்டுருவோம் என்பதைத்தான் அப்படிச்சொன்னேன் .... கல கல ....
நிறுத்த சொல்லுங்கள்
ஒரு முதலமைச்சருக்குண்டான இங்கிதம் வேண்டும். வாய்க்கு வந்தபடி பேசி திரியக்கூடாது.
இங்கிதத்தைப் பத்தி “டங் ஸ்லிப் ஆயிடுச்சு”...ன்னு சொல்லி சேர்ந்த ஆளுகிட்ட சொல்லி இருக்கணும்...
ஓட்டு போடுறவன் கேனப்பயலா இருந்தால் தொடரும்
கல்யாண வீட்டில் கூட திராவிட மாடல் என்பது family dynasty politics என்ற சூளுரை.
சிலசமயம் தப்பி தவறி உண்மை தானாகவே வெளிவந்து விடுகிறது.
அப்பா ஒன்று நினைவிலே கொள்ளுங்கள். "எல்லாம் சில காலம்". மண்ணுக்குள் போனாலும் மட்டமாக உலகம் பேசாதவாறு பார்த்து கொள்ளுங்கள் .
வாழையடி வாழையா என் குடும்பம் தலைமைப் பதவி. நீ அடிப்பொடி.வசூல் கட்டப் பஞ்சாயத்து எல்லாம் அன்பில் குடும்பம்.
மேலும் செய்திகள்
உங்களுக்கு அரசு துணை; அரசுக்கு நீங்கள் துணை; சொல்கிறார் துணை முதல்வர் உதயநிதி
மார் 07, 2026 01:20 am