/ செய்திகள் /  மாஜி அமைச்சருக்கு அ.தி.மு.க.,வில் பதவி

 மாஜி அமைச்சருக்கு அ.தி.மு.க.,வில் பதவி

சென்னை: அ. தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு, அக்கட்சியில் அமைப்புச் செயலர் பதவி வ ழங்கப்பட்டு உள்ளது. கடந்த, 2016 தேர்தலில், அ.தி.மு.க., சார்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற நடராஜன், 2016 முதல் 2021 வரை சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தார். அ.தி.மு.க.,வில் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் நீக்கப்பட்டபோ து, அவருக்கு ஆதரவாக இருந்து வந்தார். தற்போது, பன்னீர்செல்வம் தி.மு.க.,வில் இணைந்ததைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 27ல், நடராஜன் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க., அமைப்புச் செயலராக, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நியமிக்கப்படுகிறார். கட்சியினர் அனைவரும் அவ ருக்கு முழு ஒத்துழைப் பு அளிக்க வேண்டும்' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !