தேர்தல் செலவு எல்லை மீறினால் ஊழலாக கருதப்படும்; வேட்பாளர்களுக்கு ஆணையம் எச்சரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவை: 'சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.40 லட்சத்தை கடந்து செலவழித்தால், ஊழலாக கருதப்படும்' என, தேர்தல் ஆணையம் எச்சரித்திருக்கிறது.தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், 40 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவிட வேண்டும் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருக்கிறது. வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க, ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆணையம் தரப்பில் குழு அமைக்கப்படுகிறது. செலவினங்களை எவ்வாறு கணக்கிட வேண்டும், பறக்கும் படையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக, அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தொகுதி வாக்காளர் எண்ணிக்கைக்கேற்ப இந்த செலவுப்பணம் அளவீடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு ஓட்டுக்கு இவ்வளவுன்னு ஒரு கணக்கு இருக்குல்ல, என்ன சரிதானே விகடனாரே!
நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், நீதிமன்றம் ஒப்புக் கொள்ள வேண்டுமே!
வாய்பே இல்லை. ஏதோ ஒரு சிறு சுயேட்சை மட்டுமே மாட்டுவான்...மற்ற ஏனைய பெருச்சாளிகள் தப்பித்து விடும். அன்பளிப்பு, சடங்குகள் மொய்ப்பணம், திருமங்கலம் ஃபார்முலா, ஈரோடு ஃபார்முலா ஒன்றையும் ஒழிக்க முடியாது...
Jackpot for All Election etc Govt Officials to Extract MegaCommissions from All Parties
ஓராண்டுக்காவது ஜனாதிபதி ஆட்சியை அறிவியுங்கள்..தி.மு.க ஆட்சியில் நேர்மையான தேர்தல் சாத்தியமே இல்லை.
உன் ஆசை மக்கள் ஆசை கிடையாது ஊழல் குற்றம் செய்த நபர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் இதை முதலில் செய்தால் எந்த பிரச்சனையும் வராது
என்ன சொல்ல வரீங்க சார்? தேர்தலுக்கு செலவழிக்கும் 99 சதவிகித பணமும் நேர்மையாக சம்பாதித்தது அல்ல. எல்லாம் ஊழல் செய்து வந்ததுதான். கட்சியில் இருப்பவன் ஊழல் செய்து சம்பாதித்தது. புதியதாக கட்சி துவங்கி செலவு செய்பவனுக்கு, வேறு நாடுகளிலிருந்தும், மற்ற ஊழல் செய்தவர்களிடமிருந்தும்தான் பணம் வருகிறது. ஒருவனும் தன்னுடைய சொந்தக்காசில் தேர்தலுக்கு செலவு செய்யவே முடியாது.
மக்களின் நம்பிக்கை பெற குறைந்த பட்சம் பத்து திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் .
மேலும் செய்திகள்
சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு: அதிமுக - பாஜ கூட்டணி முன்னிலை
மார் 15, 2026 08:26 pm
5 மாநிலங்களில் அரசியல் களம் சூடுபிடித்தது; தேர்தல் தேதி அறிவிப்பால் கட்சிகள் விறுவிறு
மார் 15, 2026 10:39 pm