/ செய்திகள் /  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் பொன்னேரி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல்

 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் பொன்னேரி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல்

பொன்னேரி: தமிழக சட்டசபை தேர்தல், வரும் ஏப்., 23ல் நடைபெற உள்ளதாக, நேற்று மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உடனே அமலுக்கு வந்தது. இதையடுத்து, நேற்று பொன்னேரி எம்.எல்.ஏ., அலுவலகம், நகராட்சி தலைவர் அறை, கூட்டரங்கம் ஆகியவை மூடப்பட்டு தேர்தல் அலுவலர்களால் 'சீல்' வைக்கப்பட்டன. அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. சுவரொட்டிகளை கிழித்து எடுக்கும் பணிகள் துவங்கப்பட்டன. அரசு அலுவலகங்களில் முதல்வரின் படங்கள் அகற்றப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் தமிழக சட்டசபை தேர்தல் 2026 குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்தையடுத்து, மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தது. மாவட்டத்தில் ஆயுத உரிமம் பெற்றவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். அரசு பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அல்லது சட்டப்படி விலக்கு அளிக்கப்பட்டவர்கள் தவிர, மற்ற அனைவரும் இந்த உத்தரவை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய ஆவணங்கள் இன்றி, பெரிய தொகையை எடுத்து செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !