/ செய்திகள் /  நாய்கள் குரைத்து கொண்டே இருக்கும்: பிரேமலதா காட்டம்

 நாய்கள் குரைத்து கொண்டே இருக்கும்: பிரேமலதா காட்டம்

சென்னை: “குறை சொல்லாத வாயும்; குரைக்காத நாயும், இந்த உலகில் இல்லை. எங்களை விமர்சனம் செய்வோர் குறித்து, நாங்கள் கவலைப்படுவது இல்லை,” என தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார். சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: பாலியல் வன்கொடுமை, கஞ்சா, போதைப்பொருளால் ஏற்படும் பிரச்னைகள், டாஸ்மாக் மதுவால் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும். தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்த பின், தே.மு.தி.க.,வை பலர் குறை சொல்கின்றனர். குறை சொல்லாத வாயும், குரைக்காத நாயும் உலகத்திலேயே கிடையாது. குறை சொல்வோர் சொல்லிக்கொண்டே இருப்பர். குரைக்கும் நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கும். எங்கள் வேலையை பார்த்துக் கொண்டு, நாங்கள் போய் கொண்டிருக்கிறோம். தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளில், தனி தேர்தல் அறிக்கை வெளியிடுவோம். தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம். எனவே, அவர்களை கவரும் வகையிலான அறிவிப்புகளை அனைத்து கட்சிகளும் வெளியிடுகின்றன. ஆனால், தமிழக பெண்கள் புத்திசாலிகள். நல்ல கட்சி எது, ஆட்சி எது என அவர்களுக்கு தெரியும். மகளிர் தினத்தில், காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வயிற்றை எரிய வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Narayanan
மார் 09, 2026 15:29

கேப்டன் உருவாக்கிய தொலைக்காட்சி , கேப்டன் உருவாக்கிய கல்லூரிஅழித்தாய் . இப்போ கேப்டன் உருவாக்கிய கட்சி அழித்துக்கொண்டு இருக்கிறாய்


vbs manian
மார் 09, 2026 08:51

மக்களை நாய்கள் என்று சொல்லும் இவருக்கு யார் வோட்டு போடுவார்கள்.