/ செய்திகள் /  தி.மு.க., அனுதாபிகளால் திருமாவளவனுக்கு சிக்கல்

 தி.மு.க., அனுதாபிகளால் திருமாவளவனுக்கு சிக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

- நமது நிருபர் - 'சட்டசபை மற்றும் பொது மேடைகளில், முதல்வர் ஸ்டாலின் புகழ் பாடுவோருக்கு, மீண்டும் 'சீட்' வழங்க வேண்டாம்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம், அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர். தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை உட்பட பல இடங்களிலும், கட்சி தலைவர் திருமாவளவன் புகழ் பாடுவதோடு, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் புகழ் பாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். தி.மு.க., மற்றும் முதல்வரை எதிர்க்கட்சியினர் விமர்சித்தால், முதல் ஆளாக பதில் அளிப்பது, வி.சி., நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, வி.சி., நிர்வாகிகள் கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பலத்தை தி.மு.க., உணரவில்லை. கூட்டணியில் எங்கள் கட்சியை, காங்கிரஸ், தே.மு.தி.க.,வை விட குறைத்து மதிப்பிடுகிறது. இதற்கு, வி.சி.,யில் இருக்கும் சில நிர்வாகிகள் உடந்தையாக இருக்கின்றனர். தி.மு.க.,வால் பலன் அடைந்தவர்கள், எவ்வளவு தொகுதிகள் தி.மு.க., ஒதுக்கினாலும் கூட்டணியில் தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தி.மு.க., அனுதாபிகளாக இருக்கும் அவர்கள், ஸ்டாலின் புகழ் பாடுவோராக உள்ளனர். எனவே, வி.சி.,யில், மாவட்டச் செயலர் போன்ற பதவிகள், எப்படி ஒருமுறை மட்டும் வழங்கப்படுகிறதோ, அதேபோல், எம்.எல்.ஏ., சீட்டும் ஒருமுறை மட்டுமே வழங்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் விசுவாசிகளுக்கு, வி.சி.,யில் 'சீட்' வழங்கக்கூடாது என, திருமாவளவனிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sun
மார் 10, 2026 13:05

ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல தி.மு.கவின் நெ1 அடிமையான தலைவரிடமே போய் தி.மு.க ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்காதீர்கள் எனப் புகார் செய்திருக்கிறார்கள். சிரிப்பு, சிரிப்பா வருது!


krishna
மார் 10, 2026 12:38

IVARUKKE EXTRA SWEET BOX KODUTHAA IVARUM SERNDHU THUNDU SEATTUKKU JALRA PODUVAAR.


vijay
மார் 10, 2026 09:43

இவருக்கு வேற வேலை இல்ல. எப்ப பாரு ஏட்டிக்கு போட்டியா ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும்


மேலும் செய்திகள்