தே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதியோ அதே அளவுக்கு வேணும்: தி.மு.க.,விடம் வி.சி., கம்யூனிஸ்டுகள் பிடிவாதம்
சென்னை: தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ, அத்தனை தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பிடிவாதமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்க முடியாது
வரும் சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் 28; முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகள் என ஒதுக்கி, உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது. கூட்டணியில், 23 கட்சிகள் இடம்பெற்ற நிலையில், தே.மு.தி.க., - வி.சி., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன், தி.மு.க, தொகுதி பங்கீட்டு குழு பேச்சு நடத்தி வருகிறது.எதிர்பார்ப்பு
'எனவே, தே.மு.தி.க.,வை விட குறைவான தொகுதி கொடுப்பதை ஏற்க முடியாது' என, தி.மு.க., குழுவிடம் திட்டவட்டமாக கூறியுள்ளன. இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:பல்வேறு கூட்டணி வாய்ப்புகள் இருந்தும், கொள்கை அடிப்படையில், தி.மு.க., கூட்டணியில், எங்கள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்கிறார். அதற்கான மரியாதையை, தொகுதிகளை ஒதுக்குவதில் தி.மு.க., காட்ட வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் எதிர்பார்ப்பு.கடும் நெருக்கடி
தி.மு.க.,வுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து, அதிக தொகுதிகளை காங்கிரஸ் வாங்கி விட்டது. சில வாரங்களுக்கு முன், கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.,வுக்கு, எட்டு அல்லது 10 தொகுதிகள் கொடுப்பதை, நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை எங்களுக்கும் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதேபோல், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும், 'தே.மு.தி.க.,வுக்கு இணையாக எங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' என்பதில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தி.மு.க.,வுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'வி.சி., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், கடந்த 2021 தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளே தரப்படும். முதல்வர் ஸ்டாலின் பேசினால், அவர்கள் சமாதானமாகி விடுவர்' என்றார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 17 )
விடுதளை சிருத்தைகல் நீண்ட காள கூட்டாலிகள். எணவே அவர்கல் கேட்கும் அலவுக்கு சீட்டுகல் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக விடுதளை கிருத்தய்கல் கட்சி தமிலகத்திள் பெறும் கட்சியாக வளர்ந்துள்ளது.
இதயத்தில் இடம் கொடுத்துவிட்டேன் என்று ஸ்டாலின் சொன்னாலும் சொல்லுவார்.
தே மு தி க வுக்கு இருக்கும் அதிக சீட் ஆசை வெறியை குறைக்க திமுக போட்டுள்ள சதித் திட்டத்தின் படி விசிக, கம்யூனிஸ்ட்களின் நாடகம்தான் இது. இந்த விபரம் கூட தெரியாமல் மக்கள் இருக்காங்க.
INDHA DRAMA ELLAM KOODUDHAL SWEET BOX VAANGA PODUM NAADAGAM.
In 2026 elections, if DMDK is given 10 constituencies by DMK, then VCK must be given 4 constituencies. This is because of the fact that VCK was given 6 already in 2021 elections. Simple arithmetic, 10-4=6.
பேரம் சீட்டுக்கானது அல்ல என்பது கருவில் இருக்கும் சிசு, புல்பூண்டுகளுக்கு கூட தெரியும் .
கடுவெளி சித்தர் அருளிய : நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
கொத்தடிமைகள் உரிமை கோர கூடாது..அப்புறம் பிஜெபி பூந்துடும். கொள்கை முக்கியமா..எம் எல் ஏ சீட் முக்கியாமா???கொள்கை முக்கியம் என்பதால் திமுக சீட் கொடுத்தாலும் கொடுக்வில்லை என்றாலும் அங்கேயே இருங்கோ...
அதே உடைந்த பிளாஸ்டிக் சேரை பரணையில் எடுத்து வைத்துள்ளோம் அதையே தரமுடியும் புதுசா எல்லாம் வாங்கி தர அளவிற்கு இந்த கொத்தடிமை ஒர்த் இல்ல
கொடுக்க மறுத்தால் பிஜெபி அதிமுக அணியில் சேர்ந்து விடுவார்களா?
மேலும் செய்திகள்
தேர்தல் எதிரொலியால் போட்டா போட்டி; தி.மு.க., - அ.தி.மு.க., பரிசு பொருட்கள் வழங்கல்
மார் 10, 2026 06:04 am