புதிய தமிழகம் கட்சியுடன் தி.மு.க., கூட்டணி பேச்சு
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ண சாமியை கூட்டணிக்குள் கொண்டு வர, தி.மு.க., பேச்சு நடத்துகிறது. இதுகுறித்து, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது: தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுகளை கவர, தி.மு.க., முயற்சி செய்கிறது. அதன் ஒரு பகுதியாக, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன் பேச்சு நடக்கிறது. ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை, அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், இரண்டு சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட, தி.மு.க., தரப்பில் பேசப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஆலோசித்து சொல்வதாக, அவர் கூறியிருக்கிறார். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லாம் எரியாத பல்புகள வே கூடுது
மேலும் செய்திகள்
ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து படிக்கும் விஜய்; அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
மார் 04, 2026 06:05 pm
சுயமரியாதையை சீண்டி பார்ப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
மார் 04, 2026 01:11 pm