த.வெ.க.,வால் காங்கிரஸ் பயன் அடைந்துள்ளது
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தாலும், கூட்டணியில் சில மனமாச்சரியங்கள் ஏற்பட்டுள்ளன. த.வெ.க.,வால், காங்., கட்சியினர் பயன் அடைந்துள்ளனர். அதாவது, த.வெ.க.,வுடன் செல்லப்போவதாக கூறி, தி.மு.க.,விடம் கூடுதல் சீட்டை பெற்றுள்ளனர். த.வெ.க., தனித்து போட்டியா அல்லது வலிமையான கூட்டணியுடன் போட்டியா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், த.வெ.க.,வுக்கு வரலாம். ஏனெனில், அவருக்கு அங்கு சீட் கிடைக்க போவதில்லை. அவர் மகனுக்கு மட்டுமே சீட் கிடைக்கும். தனித்து நின்று முதல்வராவதற்கு மட்டுமே த.வெ.க., தலைவர் விஜய் இருக்கிறார்; மற்றவர்களுக்காக ஓட்டு கேட்க இல்லை. - செங்கோட்டையன் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், த.வெ.க.,
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தி.மு.க., கூட்டணியை உடைக்கும் முயற்சி முறியடிப்பு: ஸ்டாலின்
மார் 06, 2026 07:38 am