/ செய்திகள் / நவாஸ்கனிக்கு எதிரான வழக்கு: வாபஸ் பெற பன்னீர்செல்வம் முடிவு

நவாஸ்கனிக்கு எதிரான வழக்கு: வாபஸ் பெற பன்னீர்செல்வம் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நாவஸ்கனி வெற்றியை எதிர்த்த வழக்கை திரும்பப் பெற, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில், 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை விட, 1 லட்சத்து, 66,782 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நவாஸ்கனியின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து வந்தார். தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி, நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் பன்னீர் செல்வம் இரண்டு நாட்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். சமீபத்தில், தி.மு.க.வில் பன்னீர்செல்வம் இணைந்தார். அவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி, பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி, தேர்தல் கமிஷனை எதிர் மனுதாரராக சேர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய, பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !