த.வெ.க.,வில் நாளை வேட்பாளர் நேர்காணல்
சென்னை: சட்டசபை தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களில், தகுதியானவர்களை நேரில் அழைத்து நேர்காணல் நடத்த, த.வெ.க., தலைமை முடிவெடுத்துள்ளது. இதில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. த.வெ.க., நிர்வாகிகள் கூறுகையில், 'கட்சி சார்பில், எவ்வளவு பேர் விருப்ப மனு வழங்கினர் என்ற விபரத்தை, தலைமை இன்னும் வெளியிடவில்லை. 'ஆனால், பல தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் வேலையை துவக்கி விட்டனர். இந்நிலையில், நாளை முதல் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடக்க உள்ளதாக, வாய்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
த.வெ.க., தலைவர் விஜயை தமிழக மக்கள் நிராகரிப்பர் கொங்கு இளைஞர் பேரவை தனியரசு கருத்து
மார் 09, 2026 05:33 am
ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்து திமுக நிர்வாகி குடித்தனம்; அண்ணாமலை கண்டனம்
மார் 09, 2026 12:26 pm