விஜயை அழைத்த பா.ஜ., நிர்வாகி பதவி பறிப்பு
சென்னை: 'தி.மு.க.,வை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதுதான், தன் லட்சியம்' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறி வருகிறார். 'இது உண்மையாக இருந்தால், அவர் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைய வேண்டும்' என, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் அறிக்கை வெளியிட்டிருந்தார். 'த.வெ.க., உடன் பேச்சு நடத்தவில்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிய நிலையில், பிரசாத் கருத்து அதற்கு எதிர்மறையாக இருந்தது. இந்நிலையில், செய்தி தொடர்பாளர் பொறுப்பு, தேர்தல் பணிக் குழுவில், ஊடகத்துறை பொறுப்பு ஆகியவற்றிலிருந்து பிரசாத், விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் நேற்று இரவு அறிவித்தார். இதற்கிடையில், இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசைக்கு என்ன தண்டனை எனக் கேட்டு, பிரசாத் ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தேஜ கூட்டணி பிரபலம் அடைவதால் திமுகவுக்கு அதிர்ச்சி: பிரதமர் மோடி
மார் 10, 2026 04:50 pm
நோயை விட கொடுமையானது ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
மார் 10, 2026 02:12 am
தேர்தல் எதிரொலியால் போட்டா போட்டி; தி.மு.க., - அ.தி.மு.க., பரிசு பொருட்கள் வழங்கல்
மார் 10, 2026 06:04 am