தி.மு.க., ஒருமுறை கூட வெல்லாத தொகுதி!
தமிழகத்தில், ஆறு முறை ஆட்சியில் இருந்த தி.மு.க., ஒருமுறை கூட வெற்றி பெறாத தொகுதிகளில் ஒன்று, கோவில்பட்டி. இந்த தொகுதியில், தி.மு.க., நேரடியாக நான்கு முறையும், சில தேர்தல்களில் அதன் கூட்டணி கட்சிகளும் களம் இறங்கின. இதில், தி.மு.க., ஒருமுறை கூட வெற்றி பெற்றது இல்லை. கடந்த, 1952 முதல் நடந்த 16 தேர்தல்களில், மூன்று முறை காங்கிரஸ் ஒரு முறை சுயேச்சை; ஏழு முறை இ.கம்யூ.,; ஐந்து முறை அ.தி.மு.க., என வெற்றி பெற்றுள்ளன. 2006 முதல் 2021 வரை தொடர்ச்சியாக நான்கு முறை அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதி, இது. கடந்த 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு வெற்றி பெற்றார். கடந்த 2021 தேர்தலில், அ.ம.மு.க, பொதுச்செயலர் தினகரன், இரண்டாம் இடத்தை பிடித்தார். தி.மு.க., கூட்டணியில், மா.கம்யூ., வேட்பாளர் சீனிவாசன் மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த முறை தி.மு.க., நேரடியாக களமிறங்கி, வரலாற்று கறையை போக்க முயற்சித்து வருகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உரிமைத்தொகை என ஏமாற்றியது ஒரு கரம். பெண்கள் பாதுகாப்பை பறிப்பது மறு கரம். எங்கே போனது ஸ்டாலினின் இரும்பு கரம்.?
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம் .... டில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ஒன்று ஹோலி பண்டிகையின்போதும், மற்றொன்று தீபாவளி பண்டிகை யின்போதும் வழங்கப்படும். அதற்காக, பட்ஜெட்டில் ₹260 கோடி ஒதுக்கீடு. - டில்லி பட்ஜெட் தாக்கலின்போது முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு. அவங்க கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றனர் ... தமிழகத்தின் தத்தி ஒன்னும் செய்யல...
மீதம் உள்ள தொகுதிகளில் அப்படியே யோக்கியனாக ஜெயித்து விட்டார்களாக்கும்?
தமிழகத்திலிருந்து திமுக துடைத்து எரியப்படும்
இப்போவே கதறுங்க. தேர்தலுக்கு பின்னால் நீங்க இருக்கற இடம் கூட தெரியும இருப்பீங்க
மேலும் செய்திகள்
தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி: பா.ஜ.,வுக்குள் வெடித்தது பூகம்பம்
மார் 29, 2026 01:44 am