Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அதிகாரிகள் அனுமதி மறுப்பால் த.வெ.க.,வுக்கு தொடரும் சிக்கல்

அதிகாரிகள் அனுமதி மறுப்பால் த.வெ.க.,வுக்கு தொடரும் சிக்கல்

சென்னை: த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதும், அக்கட்சி தலைவர் விஜய் சுற்றுப்பயணமும், தேர்தல் கமிஷன் அனுமதி கிடைக்காததால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இதன்பின், விஜயின் சுற்றுப்பயணத்துக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதேபோல், 5,000 பேருக்கு மேல் பங்கேற்கும் கட்சி கூட்டங்களுக்கு, அரசின் சார்பில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்தபோதிலும், இந்த வழிகாட்டு நெறிமு றைகளை, த.வெ.க., மட்டும் கடுமையாக எதிர்த்தது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று, வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சிக்கு த.வெ.க., ஏற்பாடு செய்தது. அதேபோல், சென்னையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், அவரது பிரசாரத்தை இன்று துவக்கவும் திட்டமிடப்பட்டது.

ஆனால், தேர்தல் கமிஷன் அனுமதி கிடைக்காததால் த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு, நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி நடத்த நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், 48 மணி நேரத்துக்கு முன்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது.

இதனால், ஏற்பாடு நடத்தும் இடத்துக்கு வந்த அதிகாரிகள், 'அனுமதி இல்லாமல் நிகழ்ச்சி நடத்தினால், ஹோட்டலை சீல் வைத்து விடுவோம்' என சொல்லி விட்டனர்.

இதையடுத்து, நுங்கம்பாக்கம் ஹோட்டலில் ஏற்பாடு செய்ய, அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், காவல் துறை தடையில்லா சான்றிதழ் தர தாமதமாகி விட்டது. இதனால், நேற்று நிகழ்ச்சி நடத்தவில்லை.

இப்போது, நாளை நிகழ்ச்சி தேதி நடத்த அனுமதி வாங்கியுள்ளோம். அதன்படி, அன்றைய தினம் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

பெரம்பூரில் விஜய் பிரசார திட்டத்துக்கு, 25ம் தேதியே தேர்தல் கமிஷனிடம் மனு அளிக்கப்பட்டுவிட்டது. 3,000 பேருக்கு மேல் அந்த இடத்தில் நிற்க முடியாது என, அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இதனால், அண்ணா நகர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளிலும் விஜயால் பிரசாரம் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தி.மு.க., எந்த அளவுக்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்த தடையே சாட்சி த.வெ.க., சார்பில் திட்டமிடப்பட்ட பிரசாரத்திற்கு, சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிச தாக்குதல். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே, த.வெ.க., சார்பில், சென்னை பெரம்பூர் முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
ஆனால், ஒரு நாளுக்கு முன்பு, சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன், த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க., காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?
புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயலுக்கு, ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகின்றனர். த.வெ.க.,வை கண்டு தி.மு.க., எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு, இந்தத் தடையே சாட்சி.

- விஜய் தலைவர், த.வெ.க.,



48 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்: தேர்தல் அலுவலர் குமரகுருபரன் விளக்கம்

மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் அளித்த பேட்டி: த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் செய்வதற்கு, இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. போலீசார் அனுமதி வழங்கிய இடங்களை தவிர, வேறு இடங்கள் கேட்டால் அனுமதி கொடுக்கப்படாது. அரசியல் கட்சிகள், பொதுக்கூட்டங்கள், பேரணி, தெருமுனைக் கூட்ட பிரசாரம் நடத்துதல், வாகனங்கள், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் ஆகியவற்றிற்கு, 'சுவிதா' செயலி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆராய்ந்து, உரிய முறையில் இருந்தால் அனுமதி அளிப்பார். கூட்டம் துவக்குவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், விண்ணப்பிக்க வேண்டும். எவ்வளவு கூட்டம் வரும், போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து, காவல் துறை, சில இடங்களை தேர்வு செய்துள்ளது.
பொதுக்கூட்டங்கள் நடத்த 112 இடங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்த 179 என, 291 இடங்களில் மட்டும் அனுமதி வழங்கப்படும். இதர இடங்களில், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. காவல் துறை, போக்குவரத்து துறை, பொதுப்பணித் துறை, மின்சார துறை, தீயணைப்பு துறைக்கு, அந்த விண்ணப்பங்கள் தடையி ல்லா சான்றுக்காக அனுப்பப்படும். அதன் அடிப்படையில், தேர்தல் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
இத்துறைகளிடம் தடையின்மை சான்று கிடைக்காத பட்சத்தில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். சென்னையில் இதுவரை, 816 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 408 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன; 134 நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 274 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மார் 28, 2026 06:20 pm

பிணம் விழுந்தால் பின்னங்கால் பிடதியில் பட நீங்கள் ஓடி ஒளிந்து விடுவீர்கள். கஷ்டம் மற்றவர்களுக்குத்தான்.

Reply Rate this
மார் 28, 2026 10:23 am

I think vijay party preparing for 2031 elections. Best of luck.

Reply Rate this
சாரி.... அப்பவுமே “வாய்ப்பில்ல ராசா”....? அது வரைக்கும் தாங்கமாட்டார் இவர்...? இவருக்கு வந்த உடனே சி.எம்.ஆயிடணும்..னு என்ற எண்ணம்..இல்லையில்ல... வெறி...? “பேராசை பெருநஷ்டம்” என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கப் போகிறவர் இந்த விஜய்...?
மார் 28, 2026 05:25 pm
Rate this
மார் 28, 2026 09:32 am

காருக்குள்ள பாத்தியா , எம்ஜியாரை பாத்தியா , சிவாஜியை பாத்தியா , காமராஜை பாத்தியா , காந்திய பாத்தியா , அண்ணாதுரை பாத்தியா , ரஜினியை பாத்தியா கமலஹாசனை பாத்தியா , பாரதிராஜா பாத்தியா விஜயகாந்த பாத்தியா விஜய பாத்தியா . . . இப்டி ஓட்டு கேட்டு வருவாங்கண்ணே ,

Reply Rate this
மார் 28, 2026 08:32 am

நெறிமுறைகள் நீதிமன்றத்தின் தேவைப்படிதான் உண்டாக்கப்பட்டது. எல்லா கடசிகளுடனும் பேசி முடிவானது. எனவே இது த வெ க வுக்கு ஆத்திரம் என்பது வடிகட்டிய பொய் . 48 மணி நேரத்திற்கு முன் கேட்டிருக்க வேண்டும். மேலும் அந்த அப்களில் அங்கு ஒரு விபத்து நடந்திருந்தால், நிச்சயம் நுமதி மறுக்கப்படும் என்பதும் உண்மை தானே. கோவிலுக்கு அருகில் மரணம் அடைந்தாள் பூஜைகள் கூட நிறுத்திவைக்கப்படும். சரி, இதற்கும் பட்டியல் வெளியிடுவதற்கும் நேரடியாக என்ன தொடர்பு? பனையூரிலிருந்தே பத்திரிகையாளர்களைக் கூப்பிட்டு வெளியிடலாமே . நான் யாருக்கும் கட்டுப்படாதவன் என்ற மன நிலைக்கு வைத்தியம் இல்லை.

Reply Rate this
மார் 28, 2026 07:33 am

கூட்டம் நடத்த ஒரு சில இடங்கள் அனைத்து கட்சி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆலோசிக்கப்பட்டு தேர்ந்து எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே கட்சிகள் நாள் நேரம் இடம் கேட்டு அனுமதி பெற வேண்டும். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு அந்த நேரம் அனுமதி தரப்படும். இந்த கூட்டத்தில் தவெக கட்சியினரும் கலந்து கொண்டனர். இப்படி இருக்க தலைமை தூங்கிவிட்டு மற்றவர்கள் மீது பழி போடக்கூடாது

Reply Rate this