மேடையில் கலங்கிய அண்ணாமலை: கடைசி நாள் பிரசாரத்தில் உருக்கம்

கோவையில் முதியோர் இல்லத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசும் போது கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், "என் மண் என் மக்கள் யாத்திரை முடிந்த உடன் லோக்சபா தேர்தல் வந்துவிட்டது. இங்கு போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இங்குள்ள முதியோர்களுடன் மாலை நேரத்தில் அமர்ந்து பேச வேண்டும் என கடந்த ஓராண்டாகவே முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், அதற்கு நேரம் கிடைக்கவில்லை.

தேர்தல் பிரசாரம் செய்வதற்கு இன்று கடைசி நாள். அதனால் உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என நினைத்தேன். அதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது" எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்கலங்கினார்.

அவரைத் தேற்றும் வகையில் அங்கிருந்தவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கங்களை எழுப்பினர்.


Mohan das GANDHI - PARIS, பிரான்ஸ்
18-ஏப்-2024 00:38 Report Abuse
Mohan das GANDHI திரு அண்ணாமலை நேர்மையான மாமனிதர். மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்தவர் குடும்பஸ்தர். பெற்றோர்களை பெரியவர்களை மதிப்பவர். இது தேர்தலுக்காக அல்ல அவர் அழுதது மற்றவர்களின் நிலையை அறிந்து கண்ணீர் விட்டார் என்பதே உண்மை காரணம் திராவிட திருடர்கள் திமுக & அதிமுக அரசுகள் மாறி மாறி 58 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு இன்று 96% மக்கள் ஏழைகளாகவும் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஷ்டப்படுகிறார்கள் காரணம் இந்த இரு திராவிட ஊழல் பெருச்சாளிகள் கருணாநிதி குடும்பம் ஸ்டாலின் , ஜெயலலிதா அதிமுக எடப்பாடி இலிச்சாமி வரை ஊழல் கொள்ளையர்கள் அனைத்து செக்டர்களிலும் சுரந்து சுரண்டி தின்றவர்களே? இனி பாஜக தான் தமிழகத்தை திரு அண்ணாமலை ips தலைமையில் நேர்மையாக ஆழ மக்கள் வழி செய்வது கடமை தமிழர்களின் ஒட்டு இனி பாஜக அண்ணாமலை டிப்ஸ் & அவர் கூட்டணிகளுக்கும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் எதிர்காலம்
கனோஜ் ஆங்ரே - மும்பை, இந்தியா
17-ஏப்-2024 12:50 Report Abuse
கனோஜ் ஆங்ரே நாங்க தமிழக அரசியல் வரலாற்றில் உன்னப் போல எத்தனை பேரை பார்த்திருப்போம்.. .இந்த டகால்டி வேலையெல்லாம் காட்டி... ஓட்ட வாங்கிடலாம்..னு நினைச்சுராத..?
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்