உங்கள் ஓட்டு தான் கடைசி ஆயுதம்: ஸ்டாலின்

"தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.,வையும் தமிழகத்தை பாழ்படுத்திய அ.தி.மு.க.,வையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும்" என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாளாக ஏப்ரல் 19 இருக்கிறது. நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில் தான் இருக்கிறது. நீங்கள் போடும் ஓட்டு என்பது எம்.பி.,க்களை தேர்வு செய்யும் ஓட்டு இல்லை.

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஓட்டு. இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா... வேண்டாமா என முடிவு செய்யும் தேர்தல்.

அரசியல் சட்டத்தைக் காக்க நடக்கும் தேர்தல். ஜாதி, மதம் கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ நீங்கள் போடும் ஓட்டு தான் கடைசி ஆயுதம். மகளிருக்கு 1000 ரூபாய் திட்டம், விடியல் பஸ் பயணத் திட்டம், முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி என பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் உறுதுணையாக இருக்கும் தி.மு.க., அரசின் சாதனைகள் இந்தியா முழுதும் எதிரொலிக்க இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்கள். தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.,வையும் தமிழகத்தை பாழ்படுத்திய அ.தி.மு.க.,வையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும்.

தமிழகத்துக்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க தமிழையும் தமிழரையும் உண்மையாக நேசிக்கும் மத்திய ஆட்சி டில்லியில் அமைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Cheran Perumal - Radhapuram, இந்தியா
18-ஏப்-2024 05:40 Report Abuse
Cheran Perumal சரியாகத்தான் சொல்கிறார். மக்களின் கடைசி ஆயுதம் இந்த அரக்க ஆட்சிக்கு எதிரான ஓட்டு.
R.MURALIKRISHNAN - COIMBATORE, இந்தியா
17-ஏப்-2024 23:06 Report Abuse
R.MURALIKRISHNAN ஐயா உங்க கட்சிகாரனே உங்களை கழுவி ஊத்தறாங்க ஏன்
Duruvesan - Dharmapuri, இந்தியா
17-ஏப்-2024 20:06 Report Abuse
Duruvesan தொப்புள் கொடி உறவு மொத்தம் அழிய காரணமான காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்து நீங்க ஆடிய ஆட்டம் அடிமைகள் மறந்துடிச்சி. ஆனால் தெய்வம் நின்னு தான் தண்டிக்கும், ஜஸ்ட் வெயிட் அன்ட் வாட்ச் விடியல்
Balamurugan - coimbatore, இந்தியா
17-ஏப்-2024 17:49 Report Abuse
Balamurugan திருட்டு திமுகவை ஒழிக்க மக்களின் கடைசி ஆயுதம். மனசாட்சிப்படி உண்மையான ஒரு காரணத்தை சொல்லுங்க
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்