Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


 பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது

 பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது

தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது. பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்த தமிழகம், சீரழிந்து போனதற்கு, தி.மு.க.,வின் திறனற்ற ஆட்சி தான் காரணம். கிராமங்களில் கூட, போதை பொருள் இருக்கிறது.

ராமநாதபுரத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், புகார் அளிக்க சென்றபோது, ஏழு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டது, காவல்துறையின் மனிதாபிமானம் செத்து விட்டதை உறுதிப்படுத்துகிறது. காவல்துறை இனியும் அலட்சியம் காட்டாமல், மக்களின் புகார்களை விசாரித்து குற்றங்களை தடுக்க வேண்டும்.

- காடேஸ்வரா சுப்ரமணியம்

தலைவர், ஹிந்து முன்னணி

Advertisement