Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மதுரை மெட்ரோ: பட்னாவிசுக்கு திமுக கண்டனம்

மதுரை மெட்ரோ: பட்னாவிசுக்கு திமுக கண்டனம்

சென்னை: மதுரை மெட்ரோ தொடர்பாக மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்த கருத்துக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட பாஜ சார்பில் ராம சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பட்னாவிஸ் உடன் இருந்தார்.
இதன் பிறகு பட்னாவிஸ் கூறியதாவது: மீனாட்சி அம்மன் கோயில் உள்ள மதுரை மீது பிரதமர் மோடி எவ்வளவுநம்பிக்கை வைத்துள்ளார் என்று அனைவருக்கும் தெரியும். தமிழகத்தை மோடி நேசிக்கிறார். அவர் மனதில் தமிழகம் உள்ளது. ராமசீனிவாசன், வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன பிறகு பிரதமர் மோடியை சந்தித்த பிறகு மெட்ரோ ரயில் வரும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக நிருபர்களை திமுக எம்பிக்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் கலாநிதி வீராசாமி ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியதாவது: தமிழக அரசு தேவையான அனைத்து தொழில்நுட்ப நிர்வாக அதிகாரிகளை மேற்கொண்டு இருக்கிறது. மெட்ரோ திட்டம் குறித்து அறிக்கை சமர்ப்பித்து நிறைய பணிகளை தமிழக அரசு சமர்ப்பித்து உள்ளது. இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, எங்கள் உறுப்பினரை தேர்வு செய்தால் செய்வோம் என்பது அப்பட்டமான பிளாக்மெயிலுக்கு ஈடாகும். இங்கே முறையாக தேர்வு செய்யப்பட்ட முதல்வர் நிறைய பணி செய்துள்ளார். எதை சொல்லி அதனை உதாசினப்படுத்தி உள்ளீர்கள்.
நவ.,18 2025 மத்திய அரசு கோவை மற்றும் மதுரை டிபிஆர்களை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் 20 லட்சம் என்ற அளவை எட்டவில்லை என்று கூறி திருப்பி அனுப்பி உள்ளீர்கள்.எங்களுக்கு திருப்பி அனுப்புகிறீர்கள்.
ஆனால், ஆக்ரா மெட்ரோ மக்கள் தொகை 15.8 லட்சம்
பாட்னாமெட்ரோ 16.8 லட்சம்
போபால் மெட்ரோ 17.9 லட்சம்
இத்தனைக்கும்அனுமதி கொடுத்து கட்டுமான பணிகளை துவங்குகிறீர்கள்.இது வட மாநிலங்களுக்கான நகரங்களுக்கான ஒப்புதல். ஆனால் தமிழகம் மதுரை என்று வரும் போது 15.6 லட்சத்தை நிராகரிக்கிறீர்கள்.இப்படி இரட்டை நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு தமிழக மக்களுக்கும் தமிழர் நலனுக்கும், தமிழர்களுக்கும் மொத்தமாக துரோகம் இழைக்கின்ற மத்திய அரசு, மஹாராஷ்டிரா முதல்வர் இங்கு வந்து சொல்வதில் பின்புறம் இருக்கும் அரசியல் பின்புலத்தை உணர வேண்டும்.

இதனை தான் முதல்வர் எடுத்துக்காட்டி உள்ளார்.இதனால் தான் இது தமிழகத்திற்கும், டில்லிக்குமான தேர்தல் என்று.டில்லி வெர்சஸ் தமிழகம் என்று முதல்வர் சொல்கிறார். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் பட்னாவிஸ் சொல்லியிருக்கிற விஷயம். இவ்வாறு அவர் கூறினார்.

கலாநிதி வீராசாமி கூறியதாவது: பட்னாவிஸ் மஹாராஷ்டிராவில் முதல்வர், துணை முதல்வராக இருந்தபோது அங்கு பல்லாயிரக்கணக்கான முதலீடு வர இருந்தது. அனைத்தையும் குஜராத்திற்கு மாற்றிவிட்டனர். ரூ.2 லட்சம் கோடிக்கு முதலீடு மஹாராஷ்டிராவிற்கு வர இருந்ததை, பட்னாவிஸ் அமைதியாக இருந்த குஜராத்திற்கு மாற்றிவிட்டார். பிரதமரின் மாநிலம் என்பதால் மாற்றிவிட்டார்.மஹாராஷ்டிராவிற்கு எதுவும் கொண்டு வர முடியாதவர், மெட்ரோவை கொண்டு வருவேன் என சொல்கிறார்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு இருக்கிறது. எய்ம்சில் மாணவர்கள் படிக்கின்றனர். ராமநாதபுரத்தில் உள்ள தமிழக அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கின்றனர். அடுத்த வருடம் படித்து முடிக்க உள்ளனர். மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து வருகின்றனர். ஆனால், மருத்துவமனையை பார்க்காமலேயே படித்துவிட்டனர்.

அதிமுக ஆட்சியில் பாஜவுடன் நட்புடன், கூட்டணியில் இருந்தனர். ஆனால், தமிழகத்துக்கு எந்த திட்டங்களும் ஏற்கப்படவில்லை. தோழமை வைத்தது என்றால் சாதித்தது என்றால் அதிமுக ஆட்சியில் செய்திருக்க வேண்டும் செய்யவில்லை.பட்னாவிஸ் சொல்வது எல்லாம் கண்துடைப்பு நாடகம். குஜராத் மற்றும் நாசிக் சுற்றி தான் அரசியல் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement