Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


'நாங்களும் விட்டு கொடுத்திருக்கிறோம்': பிரேமலதா

'நாங்களும் விட்டு கொடுத்திருக்கிறோம்': பிரேமலதா
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தி.மு.க., கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.,வுக்கு, ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது. விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், தி.மு.க., - தே.மு.தி.க., இடையே, சட்டசபை தேர்தலுக்கான தொகுதி ஒப்பந்தம் நேற்று இரவு கையெழுத்தானது. தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், இதற்கான ஒப்பந்தத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து, பிரேமலதா அளித்த பேட்டி: தே.மு.தி.க.,வுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என, இன்றும் நாளையும் பேச்சு நடத்தி முடிவு எட்டப்படும்.

வரும் 27ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்; ஏப்ரல் 1ம் தேதி மனு தாக்கல் செய்யப்படும். கூட்டணி தர்மத்தின்படி, அனைத்து கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிக்காக தே.மு.தி.க., உழைக்கும்.

தே.மு.தி.க.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள 25 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை, முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளோம். விஜயகாந்த் முதன் முதலில் வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதி பட்டியலில் உள்ளது.

சென்னையில் விருகம்பாக்கம் தொகுதியும், லோக்சபா தேர்தலில் விஜயபிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் தொகுதியும் உள்ளது. கூட்டணியில் சேர நாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கை வேறு. நாங்கள் விட்டுக் கொடுத்து தான் 10 தொகுதிகளை பெற்றிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மார் 25, 2026 04:31 pm

It is frustrating to see this lady s photo

Reply Rate this
மார் 25, 2026 11:27 am

தயவு செய்து, இந்தம்மா போட்டோ போட்டு, கடுப்படிக்காதீர்கள்,

Reply Rate this
மார் 25, 2026 10:01 am

பத்து அல்ல, காங்கிரஸ்-க்கு கொடுத்தது போல் 28 தொகுதிகள் வழங்கக் கூட தகுதியான கட்சி தான், அண்ணியார் பிரேமலதா அவர்களின் தலைமையிலான தே.மு.தி.க நாட்டுப் பற்று உள்ளவர். தெய்வ பக்தி உள்ளவர். மத்திய அரசாங்கத்தை மதிப்பவர். ஒரு சில ரௌடி கட்சியை போன்று, இரு சக்கர வாகனத்தில் சென்ற வக்கீலையே, காரில் சென்று இடித்தது மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்டவர், முறைத்தார் என்று, அவர் மீதே குற்றம் சாட்டி, அவரை தாக்கியது மட்டுமல்லாமல், நம்ம பசங்க ரெண்டு தட்டு தட்டுனாங்க, ஆனாலும் பாருங்க, அடி சரியாக விழ வில்லை என்று திமிராக, ரவுடித்தனம் செய்யாத கட்சி தே.மு.தி.க யார் கண்டது, 2026 தமிழக தேர்தல் முடிவில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தொங்கு சட்டசபை வந்தால், தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட, தே.மு.தி.க வருவதற்கு முகாந்திரமுண்டு. எனவே, தே.மு.தி.க போட்டியிடும், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்

Reply Rate this
நாட்டுப் பற்று,தெய்வ பக்தி உள்ளவர்களுக்கு தி.மு.க கூட்டணியில் என்ன வேலை? கடைசியில் நண்பர் கூறியது உண்மைதான். தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்று நாளையே தேசிய ஜனநாயக கூட்டணி மந்திரி சபை அமைக்க தே.மு.தி.க ஆதரவு தேவைப்பட்டால் அப்ப இவர் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க தயங்க மாட்டார்.
மார் 25, 2026 11:18 am
Rate this

நீங்கள் விட்டுக்கொடுங்கள். தமிழக மக்கள் ஏற்கனவே உங்களை கை விட்டு விட்டார்கள். பேர லதா என்ற பெயரை வாங்கியிருக்கிறீர்கள். விஜயகாந்த் யாரை எதிர்த்து கட்சி ஆரம்பித்தாரோ அதே திருட்டு கும்பலுடன் கைகோர்த்த உங்களுக்கு இந்த தேர்தலோடு உங்கள் கட்சிக்கு மூடுவிழாதான். தமிழர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல,

Reply Rate this
மார் 25, 2026 09:33 am

தே.மு.தி.க தொண்டர்கள் பெரும்பாலும் இம்முறை அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவர்.

Reply Rate this
மார் 25, 2026 08:57 am

அதிமுக வுக்கு பத்து தொகுதிகள் நிச்சயம். திமுக கூட்டணியின் ரே இவர்களை தோற்கடிப்பார்கள். விஜயகாந்த் ஆன்மா இவரை மன்னிக்காது. இவர் மகனுக்கு ஒரு சீட் கிடைத்தால் ஆச்சரியம்.

Reply Rate this
மார் 25, 2026 08:29 am

திமுக வீட்டுக்கு போவதற்கு உதவிய உங்களை தேர்தல் முடிவுகளுக்கு பின் மக்கள் உங்களை கைகூப்பி வணங்குவார்கள். எல்லாம் அவன் செயல்.

Reply Rate this
மார் 25, 2026 07:51 am

தேசியக் கட்சியான காங்கிரஸே ஒற்றையா, ரெட்டைய்யா என்று எண்ணிக்கைக்கு போராடிக்கொண்டிருக்கையில். சுளையாக 10 ததொகுதி பிளஸ் ரா. ச நேற்று ஒட்டிக்கொண்டவருக்குக் கிடைத்தால் , விட்டுக்கொடுத்தாங்கலாம் ஒருவேளை 117 எதிர் பார்த்தங்களோ? இந்தப் பத்தாவது தேறுமா பார்க்கலாம்

Reply Rate this
மார் 25, 2026 07:41 am

நாளை அறிவாலயத்தில் இருந்து அழைப்பு வரும் அது பத்து இல்லை அது ஒன்று தான் சாரி ன்னு சொல்லுவாங்கோ

Reply Rate this
மார் 25, 2026 06:35 am

நீ உன் வம்சத்துக்கு வேண்டிய அளவு பெட்டி வாங்கியபின் பேசுவத்துக்கு arugathai இல்லாதவர்

Reply Rate this