பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை தி.மு.க.,விற்கு நெருக்கடி
சென்னை: தமிழகத்தில், 90 அணைகள், 14,000க்கும் மேற்பட்ட ஏரிகள், நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளன. இவற்றில், 44 அணைகளில் தற்போது, 25 சதவீதத்திற்கு கீழ் நீர் இருப்பு உள்ளது.
மேலும், 21 அணைகளில், 25 முதல் 50 சதவீதம் வரை மட்டுமே, நீர் இருப்பு உள்ளது. அணைகளில் இருந்து, பாசனம், குடிநீர் தேவைக்காக, தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஆறுகள் மற்றும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, 600க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தொடர் நீர் எடுப்பு காரணமாக, பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. ஆறுகளிலும் நீரோட்டம் குறைந்துள்ளது.
இதன் காரணமாக, பல மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நாமக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
பல இடங்களில், 10 நாட்களுக்கு ஒரு முறை, வாரத்திற்கு ஒருமுறை, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நகரப்பகுதிகளில் மட்டுமின்றி, கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை, தலைதுாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்தாமல், குடிநீர் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
தேர்தல் நேரத்தில் குடிநீர் பிரச்னையால், தி.மு.க.,வினருக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்