Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தோளில் துண்டு சாப்பாட்டு டோக்கன்

 தோளில் துண்டு சாப்பாட்டு டோக்கன்

தே ர்தல் காலத்தில், பிரசாரம் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணி களுக்கும் கட்சியினர் ஏராளமான தொண்டர்களை அழைத்துச் செல்வது வழக்கம். அவர்களில் பெண்களுக்கு தினமும் 500 ரூபாய், ஹோட்டலில் சாப்பாடு என்பது நடைமுறை. ஆண்களுக்கு, 'குவார்ட்டர்' பாட்டிலுக்கு ஒரு டோக்கன், புடவை, பணத்திற்கு ஒரு டோக்கன் என இரு டோக்கன்கள் வழங்கப்படும்.

ஒரு கட்சி 'டோக்கன்' கொடுப்பது பற்றி இன்னொரு கட்சி புகாரளித்தால், முதல் நடவடிக்கையாக டோக்கன்கள் பறிமுதலாகும். ஹோட்டல் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை பாயும்.

இந்த சட்டச்சிக்கலைத் தவிர்க்க, கட்சிகள் புதிய உத்தியைக் கையாளுகின்றன. தொண்டர்களுக்கு டோக்கன்களுக்கு பதில், கட்சிக்கொடி வண்ணத்தில் அமைந்த துண்டுகளை வழங்கி வருகின்றனர்.

இந்த துண்டுகளை அணிந்து, தாங்கள் சொல்லும் ஹோட்டலுக்கு செல்லும்படி கட்சியினர் கூறுகின்றனர். இதுபற்றி ஹோட்டல்காரர் களிடமும் சொல்லி வைத்து விடுவ ர்.

பிரசாரத்திற்கு பிரசாரமாகவும் இருக்கும்; தொண்டர்களை கவனித்த மாதிரியும் இருக்கும் என்பதால், இந்த உத்திதான் தற்போது 'டிரெண்ட்' ஆகி வருகிறது.

Advertisement