லொள்ளான 'தொல்': மாற்றினார் திருமா
வி டுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தந்தை பெயர் ராமசாமி. கடந்த 2002ம் ஆண்டு, ஜாதி, மத குறியீடற்ற பெயர்களை, கட்சியினர் வைத்துக் கொள்ள வேண்டும் என திருமாவளவன் அறிவித்தார்.
இதையடுத்து, தன் தந்தையின் பெயரை, தொல்காப்பியன் என மாற்றினார். அன்று முதல் தொல்.திருமாவளவன் என அழைக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், ராகு - கேதுவால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், 'தொல்' என்ற பெயர் இருந்தால் தொல்லை வரும் என, புதுச்சேரியைச் சேர்ந்த அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, தன் பெயரை, தொல்காப்பியன் திருமாவளவன் என மாற்றிக்கொண்டார் என கூறப்படுகிறது.
சமீபகாலமாக தொல்காப்பியன் திருமாவளவன் என கையெழுத்திட துவங்கி உள்ளார்.
வரும் டிசம்பர் வரை, பல்வேறு நெருக்கடிகளுக்கு அவர் ஆளாகலாம் என்பதால், யாரையும் விமர்சிப்பதையும் புறம் பேசுவதையும் தவிர்க்கும்படி, அவருக்கு ஜோதிடர் ஆலோசனை கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்