Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 நாம் தமிழருக்கே என் ஓட்டு!

 நாம் தமிழருக்கே என் ஓட்டு!

எம்.சுபா, 21தனியார் நிறுவன ஊழியர், திருப்பரங்குன்றம்

என் தொகுதியில் எங்கு பார்த்தாலும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர். மதிய நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால், கல்லுாரி சென்று திரும்ப முடியாமல் வெயிலில் காத்திருக்கிறோம்.

இதுவரை ஆண்ட கட்சிகளுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க கூடாது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வெறும் இலவசங்களை வைத்து மக்களை ஏமாற்றுகின்றன. மாணவர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதில் திராவிட கட்சிகள் எவ்வித முயற் சியும் எடுக்கவில்லை.

வணிக நோக்கம் கொண்டோரின் வாரிசுகள் மட்டுமே முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். நம் மண்ணுக்காக போராடும் சாமானியருக்கே என் ஓட்டு. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி, இயற்கை வளங்களை பேணுவதற்கு முதல் ஆளாக குரல் கொடுக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கூட்டணி எதுவும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில், குடும்பத்துடன், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட தீர்மானித்துள்ளோம்.

Advertisement

தோற்கும் குதிரை மீது பணம் கட்டினால் கட்டியவர் பணத்தை இழக்க நேரிடும்..... வீரம் முக்கியமல்ல விவேகம் முக்கியம்.....!!!

Reply Rate this
மார் 27, 2026 07:28 am

ஜாமீன் தொகை திரும்ப கிடைக்கும் என்று நம்புவோம்

Reply Rate this