தேர்தல் வருவதால் பணிகளில் கவனம்: அதிகாரிகளை உஷார்படுத்திய அமைச்சர்
சென்னை: ''பணியை முடித்தால், உடனே பில் தொகை பட்டுவாடா செய்யப்படும்; எனவே நிலுவையில் உள்ள பணிகளை, ஒப்பந்ததாரர்கள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, நெடுஞ்சாலைத் துறையினருக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், பொறியாளர்களுடன், அமைச்சர் வேலு நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
முக்கிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நடக்கும், 100 சாலை சந்திப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
வேலை முடிந்தவுடன் உடனடியாக பணப்பட்டுவாடா செய்ய, போதுமான நிதி உள்ளது. நிலுவையில் உள்ள சாலைகள், மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை, சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக முடிக்க வேண்டும்.
சட்டசபை தேர்தல் வருவதால், நெடுஞ்சாலைத் துறையினர் கவனமாக இருக்க வேண்டும். சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டால், உடனடியாக 'பேட்ச் ஒர்க்' செய்ய வேண்டும்.
கண்காணிப்பு மற்ற துறைகளால் வெட்டப்பட்ட சாலை பள்ளங்களில், சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். சாலை பணிகள் நடக்கும் இடங்களில், விபத்துகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான அறிக்கையை, கண்காணிப்பு அதிகாரிகள் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Advertisement

ஏன் ஊழல் வேலு ஸாரி எ.வ. வேலு கடந்த நாலேமுக்கால் வருடம் இந்த ஓட்டுப் போட்ட அப்பாவி மக்களை நினைவுக்கு வரவில்லைதானே?