காங். தொகுதிகள் தேர்வு ரகசியமாகவே நடந்தது, வெளிப்படைத் தன்மை இல்லை; ஜோதிமணி புகார்
சென்னை;காங்கிரஸ் தொகுதிகள் தேர்வு அனைத்தும் ரகசியமாகவே நடந்தது, வெளிப்படைத்தன்மை இல்லை என்று அக்கட்சியின் எம்பி ஜோதிமணி புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
காங்கிரஸ் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. வெளிப்படைத் தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது.
காங்கிரசின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழக காங்கிரசுக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.
இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல.
லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement
புள்ளபூச்சிக்கு தண்ணீ வாத்துவிட்டு, அது போடுற ஆட்டத்தை தாங்க முடியாமல் ஸ்டாலின் தவிக்கிறார். ஸ்டாலினுக்கு குடைச்சல் கொடுப்பதில் ஜோதிமணி அலாதி இன்பம் அடைகிறார். விரைவில் பிஜேபியில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.
காங்.தலைமை தான்,இரகசியத்தின் முதலிடம்.நீங்கள் கேட்ட ஆளுக்கு சீட் கிடைக்காததால் வந்த விரக்தியில் வரும் பேச்சா இது.? உங்கள் தொகுதிக்கு நீங்கள் எதுவுமே செய்யலை.இருந்தாலும் மீண்டும் எம்
பி ஆனீர்கள்.எவ்வளவு பேர் வயிறு எறிந்திருப்பார்கள்.இனிமேலாவ்து வெங்காய தயிர்ப் பச்செடி வேலைக்குப் பதிலாக மக்களுக்குப் பணியாற்றுங்கள்.
பிஹார், மகாராஷ்டிரா, ஹரியானா, பாண்டிச்சேரி வரிசையில் தமிழ்நாட்டையும் சேர்க்க வேண்டும் என்கிறது இந்த காக்கா.
காங்கிரசில் விவாதித்து முடிவு எடுப்பதெற்குள் தேர்தல் முடித்துவிடும் அம்மணி
யாராலும் காப்பாத்த முடியாதுன்னு மக்களுக்கு தெரிஞ்சு ரொம்ப நாளாச்சு. இந்த முறை திமுகவை வீட்டுக்கனுப்ப மக்கள் ரெடியாயிட்டாங்க. கூட உங்க கட்சியையும்
நெல்லிக்காய் மூட்டை கூட்டணி இந்த திமுக கூட்டணி . ஒழியட்டும் இந்த கேடுகெட்ட கூட்டணி.
தனியாக நின்னா டெபாசிட் கிடைக்காது என்ற கள யதார்த்தத்தில் பேசாம இருக்கனும். திமுக புண்ணியத்துல பார்லிமெண்ட் போய் கலாட்டா பண்ண முடியுது என்ற சந்தோஷத்தோடு நிறுத்திக்கனும்.

விஜயதரணியைப்போன்று இந்த அம்மையாரையும் கட்சியை விட்டே விலக்கி விடுவார்கள் சீக்கிரம்